20 September 2006

20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்

உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!

எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை
http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...முதலில் இங்கேhttp://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.

வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.பிறகு Next-ஐத் தட்டுங்கள்அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.

அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.முன்னேற்பாடுகள்நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்

முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm


தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.


இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.

24 மறுமொழி:

said...

Thanks for your informations...
I;ll try to type in Tamil...

said...

வணக்கம்

said...

நன்றி

said...

அனானி நண்பர்் இருவருக்கும் நன்றிகள்.
அது என்ன இரண்டாமவர் வெறும் வணக்கம் மட்டும் சொல்லியுள்ளார்....ஃ??

said...

மயூரேசா!
ஏகலப்பையை பலதடவை முயன்றும் கைகூடவில்லை. தாங்கள் கூறும் வழியில் முயல்கிறேன். மேலும் "அழகி"; வைத்துள்ளேன். அதில் தட்டச்சியதை,blogல் இட ஏற்றுக் கொள்ளவில்லை. சுரதாவில் யுனிக் கோட்டை ஏற்றுக் கொள்கிறது. விளக்க முடியுமா???. தங்கள் உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி
யோகன் பாரிஸ்

said...

இ-கலப்பபை பிரைச்சனை இல்லாமல் எனக்கு வேலை செய்கின்றது. என்ன OS பயன்படுத்துகின்றீர்கள். நான் வின்டோஸ் எக்பி தான் பயன் படுத்துகின்றேன். எந்தப்ப பிரைச்சனையும் இல்லையே!
நீங்கள் நேரடியாக blog இல் டைப் செய்தீர்களா???

said...

நண்பரே,
'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களிலெல்லாம், 'ந்' காணாமல் போய் விடுகிறது. அதற்காக 'ந்','த' இரண்டுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டியிருக்கிறது.

said...

//'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களிலெல்லாம், 'ந்' காணாமல் போய் விடுகிறது. அதற்காக 'ந்','த' இரண்டுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டியிருக்கிறது//

நீங்கள் பாமினி முறை பயன்படுத்தினால் இந்தப் பிரைச்சனை வராது. காரணம் அதுதான் நான் பாவிக்கின்றேன்.

wtha
இந்த எழுத்துகளை தட்டச்சு செய்து முயற்சியுங்கள் வெற்றி கிடைத்தால் அறியத்தாருங்கள்.

said...

நன்பரே இது என்னுடைய முதல் முயச்சி . நன்றி

உதவி பக்கம்( Key strokes) கொடுத்திருந்தல் உதவியாக இருந்திருக்கும்,

வணக்கம்

said...

அன்பரே இது நான் தமிழ் மூலம் வலை விமர்சனம் பன்னும் முயர்சி.

நன்றி . தமிழ் வாழ்க !

தட்டச்சு உதவி இல்லாமல் கடினம் . முயர்ச்சி பன்னுகிரேன்

said...

ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுத்து கொடுத்து தாவு தீர்ந்தது ஒரு காலம்.

இப்போது இந்த பதிவை அப்படியே லிங்க் போல கொடுத்துவிடலாம்.

நன்றீறீறீ

said...

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பயனாளிகள் இதைப் பயன்படுத்தலாம். online keyboard உண்டு

http://www45.brinkster.com/valaichuzhi/write/ml.html

பயர்பாக்சுக்கு இது. (by தமிழா முகுந்த்) இதை பயர்பாக்சிலேயே tamilkey extension இணைப்பாக நிறுவிக்கொள்ளலாம்

http://developer.thamizha.com/tamilkey.html

said...

Johan-Paris
அழகியிலேயே யூனிகோடு தட்டச்ச முடியும். புதிய ஆரம்ப பதிப்பிலேயே இது இணைக்கப்பட்டுள்ளதாக நண்பர் விஷி தெரிவித்துள்ளார். அவரைத்தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்

said...

தமிழ்நெட்99 விசைப்பலகை குறித்த என் விரிவான இடுகை. பார்க்கவும் -
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

said...

உபயோகமான பதிவுக்கு நன்றி.

said...

நான் அறியாத பல விஷயங்களை தெளிவு படுத்தியதிற்கு மிகுந்த நன்றி.

said...

நான் அறியாத பல விஷயங்களை தெளிவு படுத்தியதிற்கு மிகுந்த நன்றி.

said...

பயன்படுத்தும் உலாவி வகையிலும் தங்கியுள்ளது.
Advanced Browser பயன்படுத்தினால் இகலப்பை மூலமோ அல்லது வேறெந்த மென்பொருட்கள் மூலமோ நேரடியாக ஒருங்குறியில் தட்டச்ச முடியாது. வேறொரு கோப்பில் தட்டச்சி படியெடுத்து ஒட்ட வேண்டும். கிட்டத்தட்ட யாகூ தூதுவன்போல. நான் சிலதேவைகளுக்காக Advanced Browser பயன்படுத்துகிறேன். என்னால் நேரடியாக ஒருங்குறியில் தட்டச்ச முடியாது.
யோகன் பாரிஸ் பயன்படுத்துவது சிலவேளை அந்த உலாவியாக இருக்கலாம்.

said...

முடிந்த வரை தமிங்கிலத்தில் எழுதாமல் 'Tamilnet 99' பயன்படுத்துவது / முயல்வதே சிறப்பு. குறிப்பாக முதன்முதல் தமிழ் விசைப்பலகையை பயன்படுத்துபவர்கள் tamilnet 99 விசைப்பலகையை பழகுவது எளிது.

இது தொடர்பாக ரவி சங்கர் எழுதிய பதிவு.

http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

Tamilnet 99 விசைப்பலகை layout in PDF format

http://www.araichchi.net/kanini/TamilNet99-Keyboard.pdf


தமிங்கிலத்தில் இதுவரை எழுதிய நான் இப்போது Tamil net99 முறையில் எழுதுகிறேன்.

said...

பிரமாதம் அய்யா பிரமாதம் _ விக்கி

said...

இதுல ஒரு வரி ஏழுதுவதற்கு ஒரு மணி நேரம் ஆகுது அப்ப்பாபா முடியல

ஆனந்து

said...

நான் கூட தமிழ் தட்டச்சுக்கு புதுசுங்க.மிகவும் நன்றி.

said...

«ýÒûÇ ¿ñÀ÷ Áä§ÃºÛìÌ,

«È¢ó¾ ¾¸Å¨Ä À¢È÷ «È¢Ôõ Å¢¾Á¡¸ ÜÚÅÐ ±ýÀÐ ´Õ ¾É¢ò¾¢È¨Á ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.
§¾ýÜðÊø ¾í¸û ŨÄÀ¾¢Å¢¨É ¸¡½ô¦ÀüÈÐ ±ý «¾¢÷‰¼§Á. «¾ý ãÄõ ¿¡ý ¾¡í¸û ÜÈ¢ÂÀÊ
¦ÅÌ ±Ç¢¾¡¸ À¾¢Å¢Ã츢 Ó¾ø ¿ýÈ¢ÂÈ¢¾Ä¡¸ þì ¸Ê¾ò¨¾ ¾í¸ÙìÌ À¾¢ÅïºÄ¢ø «ÛôÒ¸¢§Èý. ºÁÂõ
¸¢¨¼ìÌõ §À¡Ð ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙÁ¡Ú §¸ðÎ즸¡û¸¢§Èý.

¾í¸û ¿ñÀ÷,

þá.¸§½ºý.
rganesan1965@yahoo.co.in

said...

hi machi!!!!

actually you need not put that much fight in keyboard to type tamil in your blogs or sites or even when you want to post your threads

i saw a nice tool recently available online
it can be accesed at http://quillpad.in/tamil

basically you can type like how you speak in tamil and it will convert into tamil script

எப்படி இருக்கீங்க?
நீங்களும் தமிழில் சுலபமா எழுதலாம்

செல் பொன் அடிச்சா ரீங்கு சிவாஜி அடிச்சா சங்கு

have fun!!!!