28 December 2006

51 : தமிழர் கப்பற்கலை


தமிழர் கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் ஈடுபாட்டைக் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.


தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி இது. தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்த ஆர்வம் உள்ளவர்கள் தயவு செய்து இந்த சுட்டியைக் சொடுக்கி இந்தக் கட்டுரையை மேலும் பெரிதாக்கவும்.

27 December 2006

50 : விஸ்டா வருகின்றார்!!!!

அந்தா வருது இந்தா வருது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் கடைசியாக உத்தியோக பூர்வமாக ஜனவரி 30 ல் வர உள்ளது.

இதில் சிறப்பான விடையம் என்னவெனில் விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளதாம். ம்ஹூம்... எல்லாம் மைக்ராசாப்டின் சந்தைப்படுத்தல் தந்திரம். இதே வழியில்தான் அன்று நெட்ஸ்கேப் நவிகேட்டர் வீழ்த்தப்பட்டது.


பிருத்தானியா மைக்ராசாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபிரேசர் கருத்துத் தெரிவிக்கயில் இந்த இயங்குதளம் மைக்ராசாப்ட்டின் மற்றய இயங்கு தளங்களைவிட மிக வேகமாக விற்றுத் தீர்க்கும் என்று கூறினார். அத்துடன் அடுத்த சில வருடங்களில் 100 மில்லியனுக்கு அதிகமான கணனிகளில் விஸ்டா இயங்குதளம் பயன்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஸ்டா இயங்குதளத்தின் எதிர்கால வெற்றிக்கு பிரதானமாக மூன்று செயற்பாடுகள் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

1. Underlying Engineering (Encryption, Capability)
2. Functionality – (e.g. Integrated search ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் வசதி)
3. Graphics – It’s visually stunning கண்களைக் கொள்ளை கொள்கின்றது.

விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான விஸ்டா பீட்டாவின் மூலம் மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது.

எது எதுவாயினும் முறையான டெஸ்டிங் செய்யாமல் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு விஸ்டாவிற்கு மாறாது என்பதுதான் உண்மை.

1 December 2006

49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)


உலகப் புகழ் பெற்ற ஹரிப்போட்டர் நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்களக் குளந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்... இது போல டின் டின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!!



தமிழ் ஆர்வலர்களே நீங்கள் எப்போது??