27 December 2006

50 : விஸ்டா வருகின்றார்!!!!

அந்தா வருது இந்தா வருது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் கடைசியாக உத்தியோக பூர்வமாக ஜனவரி 30 ல் வர உள்ளது.

இதில் சிறப்பான விடையம் என்னவெனில் விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளதாம். ம்ஹூம்... எல்லாம் மைக்ராசாப்டின் சந்தைப்படுத்தல் தந்திரம். இதே வழியில்தான் அன்று நெட்ஸ்கேப் நவிகேட்டர் வீழ்த்தப்பட்டது.


பிருத்தானியா மைக்ராசாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபிரேசர் கருத்துத் தெரிவிக்கயில் இந்த இயங்குதளம் மைக்ராசாப்ட்டின் மற்றய இயங்கு தளங்களைவிட மிக வேகமாக விற்றுத் தீர்க்கும் என்று கூறினார். அத்துடன் அடுத்த சில வருடங்களில் 100 மில்லியனுக்கு அதிகமான கணனிகளில் விஸ்டா இயங்குதளம் பயன்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஸ்டா இயங்குதளத்தின் எதிர்கால வெற்றிக்கு பிரதானமாக மூன்று செயற்பாடுகள் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

1. Underlying Engineering (Encryption, Capability)
2. Functionality – (e.g. Integrated search ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் வசதி)
3. Graphics – It’s visually stunning கண்களைக் கொள்ளை கொள்கின்றது.

விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான விஸ்டா பீட்டாவின் மூலம் மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது.

எது எதுவாயினும் முறையான டெஸ்டிங் செய்யாமல் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு விஸ்டாவிற்கு மாறாது என்பதுதான் உண்மை.

6 மறுமொழி:

said...

Office 2007 was launched along with Vista and Exchange 2007.
Its not packaged along with it.

said...

இங்கும் பார்த்தேன்.முகப்பு சுட்டிகள் மேக் ஒஎஸ் ஐ ஞாபக்படுத்துகிறது.நிறுவ தேவையான கணினி பாகங்கள் P4 என்றும் அதிக நினைவகமும் என்று கேள்விப்பட்டேன்.

said...

A Windows Vista Capable PC includes at least:

A modern processor (at least 800MHz1).
512 MB of system memory.
A graphics processor that is DirectX 9 capable.

இதுதான் குறைந்த பட்ச தேவை வடுவூர் குமார்!!!

said...

வருகைக்கு நன்றி கானாப் பிரபா!!! :)

said...

//Office 2007 was launched along with Vista and Exchange 2007.
Its not packaged along with it. //
Thanks for your visit :)

said...

Vista is gonna be released on Jan 29, 2006, one day earlier than you mentioned in your post.