பிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு
கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டாவும் கைவிரித்த பிளாக்கர் உதவிக்குழுவும்
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நன்றாக வேலை செய்து கொண்டு இருந்த எனது பிளாக்கரில் தேவையில்லாமல் சில மாற்றங்கள் செய்யப்போய் இறுதியில் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.
ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் பிளாக்கர் பீட்டாவிற்கு எனது பிளாக்கரை மாற்றினேன். அவ்வளவுதான் எனது பளாக்கர் கெட்டு குட்டிச்சுவரானது.
எழுத்துகளெல்லாம் ஏதோ நண்டுக்கால்கள் போல தெரிய ஆரம்பித்தன. மறுமொழி இட்டவர்களின் பெயர்கள் எல்லாம் ஏதோ போலத் தெரிந்தன. நானும் என்னால் முடிந்த பரிசோதனைகளை செய்து இருந்ததையும் கெடுத்ததுதான் மிச்சம். தமிழ் மணத்தின் கருவிப்பட்டை முதலானவையும் செயல் இழந்தது. தேன் கூடு மட்டும் வேலை செய்தது. கடைசியாக புதிய வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது.
இதன் போது பிளாக்கர் உதவிக் குழுவிற்கு நான் உதவி கேட்டு அனுப்பிய கடிதமும் அவர்கள் அனுப்பிய பதிலும் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள். யாருக்காவது உதவி செய்ய விருப்பமென்றால் அவர்களிடம் சொல்லுங்கள் பிளாக்கர் பீட்டாவிற்கு மாற வேண்டாம் என்று. கையைச் சுட்டவர்கள் பட்டியல் மோசமாக நீள்கின்றது. இனியும் தமிழ் வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவை இழக்காமல் இருக்க இந்தத் தகவலைப் பரப்புவோம்.
அன்புடன்,
மயூரேசன்
Hi there,
Thanks for writing in. I'm afraid that once you migrate your account to
Blogger in beta, you can't switch back to your old Blogger account. We
apologize for any inconvenience and we hope you enjoy our new features.
Additionally, please rest assured that we are working hard to polish
Blogger in beta and fix every bug that arises as soon as possible.
Thank you for your continued patience with these issues.
Sincerely,
Danish
The Blogger Team
Original Message Follows:
------------------------
From: Jeyakumaran Mayooresan
Subject: requst to roll back from beta
Date: Sat, 2 Sep 2006 05:52:24 -0700 (PDT)
Hi there,
I have moved to blogger beta. But it's not supporting Tamil scripts as
the previous versions. It makes me loose my viewers. Please help me to roll
back from blogger beta. I can't work with beta anymore. Please help me.
http://blogmayu.blogspot.com
Thanking you
J.Mayooresan
Management and Information Tech.
Faculty of Science
University of Kelaniya
Sri lanka.
26 மறுமொழி:
நான் ஏற்கனவே இதை செஞ்சிட்டு நொந்து போனேன். இது பற்றி பதிவர்களுக்கு முன் எச்சரிக்கை பதிவும் போட்டேன்.
http://kaalangkal.blogspot.com/2006/08/betablogger.html
நல்ல வேலை மற்றொரு பதிவு முன்பே ஆரம்பித்து வைத்திருந்ததால்
தப்பித்தேன்
உண்மை..என் Blog யாழ்பாணம் போல் ஆகிவிட்டது.....அனைத்து தொடர்புகளும் செயலிழந்துவிட்டது..
உண்மையில் மிகத் தேவையான தகவல் மயூரேசன்.. நான் கூட பீட்டாவுக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் சில நாட்களாய்..
உங்கள் பதிவுகள் தொலைந்து போனதற்கு என் வருத்தங்கள்..
Your template is very good!
ப்ளாகர் பீட்டாவுக்கு மாறினவர்களின்
பழைய வலைப்பதிவுகளுக்கு
ஒரு அஞ்சலி செலுத்தவேண்டியது தான் .
மயூரேசன்,
நானும் முயற்சித்துப் பார்க்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.
உங்கள் பதிவைக் கண்டதும் நல்லவேளையாக முயற்சிக்கவில்லை என்று திருப்திப் பட்டுக் கொண்டேன்.
தகவலையும் உங்கள் அனுபவத்தையும் தந்ததற்கு நன்றி.
பருத்தித்துறையில் உங்கள் இடம் எதுவாக இருந்தது? ரங்கூன்... குடும்பத்தவரா நீங்கள்?
நட்புடன்
சந்திரவதனா
நல்லவேளை... நானும் பீட்டாவிற்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்... எச்சரித்ததற்கு நன்றி... பழைய பதிவெல்லாம் back up எடுத்து வச்சிருக்கீங்களா???
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு
//நான் ஏற்கனவே இதை செஞ்சிட்டு நொந்து போனேன். இது பற்றி பதிவர்களுக்கு முன் எச்சரிக்கை பதிவும் போட்டேன்//
//உண்மை..என் Blog யாழ்பாணம் போல் ஆகிவிட்டது.....அனைத்து தொடர்புகளும் செயலிழந்துவிட்டது.. //
நம்ம கட்சியில் எத்தனைபேர் இருக்கிறாங்கப்பா!!!!
//உண்மையில் மிகத் தேவையான தகவல் மயூரேசன்.. நான் கூட பீட்டாவுக்கு மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் சில நாட்களாய்//
ஐயோ மாறிடாதீங்க......
//Your template is very good!//
தேவையென்றால் mayu3g@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்க. நான் இந்த அட்டைப்பலகையை அனுப்பி வைக்கின்றேன்.
//ப்ளாகர் பீட்டாவுக்கு மாறினவர்களின்
பழைய வலைப்பதிவுகளுக்கு
ஒரு அஞ்சலி செலுத்தவேண்டியது தான் //
நான் எப்பவோ செலுத்திட்டேன் ;)
//பருத்தித்துறையில் உங்கள் இடம் எதுவாக இருந்தது? ரங்கூன்... குடும்பத்தவரா நீங்கள்?//
பருத்தித்துறை நகரில் எங்கள் வீடு உண்டு. ரங்கூன் என்பவரைத் தெரியாது. பிறந்தது யாழ் என்றாலும் வழர்ந்தது முழுக்க திருமலை. பத்திரகாளி கோவில் வீதியில் எங்கள் வீடு உண்டு. சாமியப்பா வீடு என்று பிரசித்தம் அந்த ஏரியாவில
//பழைய பதிவெல்லாம் back up எடுத்து வச்சிருக்கீங்களா??? //
இல்லீங்கோ!!!!
//எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு //
என்ன சொல்ல வாரீங்க! சத்தியமா விளங்கேல
பீட்டாவிற்கு மாறத்தான் போறீங்களா????????
நானும் பீட்டாவுக்கு மாற முயற்சி செய்தேன். நல்ல வேளையாக என்னுடைய தற்போதைய டெம்பிளேட் பீட்டா மாறுதலுக்கு ஏதுவாக இல்லையெனவும், புது பிளாக் திறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதையும் திறந்தேன், பிறகு அதை மறந்தும் போனேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//நானும் பீட்டாவுக்கு மாற முயற்சி செய்தேன். நல்ல வேளையாக என்னுடைய தற்போதைய டெம்பிளேட் பீட்டா மாறுதலுக்கு ஏதுவாக இல்லையெனவும், புது பிளாக் திறக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. //
இதைத்தான் சொல்வார்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று ;)
மயூரேசன், துன்பியல் நிகழ்வு என்று நீங்கள் கொடுத்த தலைப்ப பார்த்தவுடன சிரிச்சுட்டேன். நான் எந்த bloggerல இருக்கேன்னு எனக்கே தெரில..ஆனா, கடை நல்லா ஓடுது :) யாகூ 360ல மட்டும் தான் எழுதுறீங்கனு நினைச்சேன். எ-கலப்பை பத்தி நீங்க போட்டதும் நன்று. இப்ப கொஞ்ச காலமா இது மாதிரி நிறைய பேர் உதவிக் குறிப்பு போட ஆரம்பிச்சுருக்கிறது நல்ல அறிகுறி. உங்களுக்கு சீக்கிரமே அகலப்பட்டை இணைப்பு கிடைச்சு விக்கிபீடியாவுல முழுநேரம் குடியேற கதிர்காம முருகன வேண்டிக்கிறேன் ;)
ஒவ்வொரு முறையும் புளொக்கரில புகும்போது பீட்டாவுக்குள் விழாமல் தப்பிப் போறது பெரிய விசயம்.
இவ்வளவுநாளும் தப்பிவந்திட்டன்.
விசயம் தெரியாத ஆக்கள் ஓமெண்டு சொல்லி கிளிக்கினா கதை அம்போதான். (யோகன் பாரீஸ் தரவளி ஆக்கள் உப்பிடித்தான் மாட்டுப்பட்டிருப்பினம்)
ஆசைகாட்டி பாதாளத்தில விழுத்திறதுக்கெண்டே ஒவ்வொருமுறையும் முயலுறாங்கள்.
எனக்கு உந்த பீட்டாப் பயம் வந்தது MSN காரன் பீட்டா விடேக்க.
கொஞ்சநாளா Hotmail பார்க்க ஏலாமல் நான் பட்ட அவதியிலயே முடிவெடுத்திட்டன், இனி உந்தமாதிரி பாதாளத்தில விழுறேல எண்டு.
மிகவும் கவலையான செய்தி மயூரேசன், பதிவை எழுதுவதன் சிரமத்தை அனுபவித்த வகையில் சொல்கிறேன்
கூகுள் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறது.
ஆனால் இந்த பிளாக்கர் பீட்டா அவர்களுக்கு கெட்ட பெயரைத்தான் வாங்கிக் கொடுத்திருக்கின்றது.இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியும், அதை அடித்துச் சரி பண்ண வடிவமைத்தவர்கள் ஏன் வர மாட்டேன் என்றிருக்கின்றார்கள். அந்த டீமில் ஒரு தமிழர் கூடாவா இலலாமல் போய்விட்டார்?
SP.VR.சுப்பையா
கூகுள் எவ்வளவோ நல்லது செய்திருக்கிறது.
ஆனால் இந்த பிளாக்கர் பீட்டா அவர்களுக்கு கெட்ட பெயரைத்தான் வாங்கிக் கொடுத்திருக்கின்றது.இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியும், அதை அடித்துச் சரி பண்ண வடிவமைத்தவர்கள் ஏன் வர மாட்டேன் என்றிருக்கின்றார்கள். அந்த டீமில் ஒரு தமிழர் கூடாவா இலலாமல் போய்விட்டார்?
SP.VR.சுப்பையா
நானும் ப்ளொக்கர் பெட்டாக்கு மாறினேன். நீங்கள் கூறியது போல தமிழ்மணத்தில் இணைவது கடினமாக இருந்தது.(நான் முன்னரே தமிழ்மணத்தில் இருக்கவில்லை)இப்பொழுது அது தீர்க்கப்பட்டுவிட்டது. மற்றபடி நீங்கள் கூறும் எந்த பிரச்சனையும் எனக்கு இல்லை.ஆனாலும் உங்கள் உணர்வினை புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் இந்த பிரச்சனை போக வேண்டும்..
மயூரேசா,
நானும் இந்தப் பாழாப்போன பீட்டாவுக்குத் தெரியாத்தனமாக மாறித் தொலைத்துவிட்டேன். எல்லாம் போச்சு. தமிழ்மணத்தில் பீட்டாவுக்கு மாறிய என்னைப் போன்ற பாவப்பட்டவர்களுக்காக ஒரு பதிவு இயங்குகிறது.
அதில் சொல்லி இருந்தபடி நானும் என்னென்னமோ செய்து பார்த்துவிட்டேன். பாழாய்ப் போனது. உனக்கு ஏதேனும் வழிமுறைகள் (புது வலைப்பூ ஆரம்பிப்பது தவிர) தெரிந்தால் பகிர்ந்து கொள், நன்றாக இருப்பாய்!
I apologize for the past. Now most of the problems are already fixed. Try it now.
இப்போ எல்லாம் சரியாகி விட்டது. திரும்பவும் சோதித்து பாருங்கள்.
மயூரேசன்,
புது ப்ளாக்கருக்கு மாறிய வலைப்பதிவுகளி்ல் பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் accented (கோபி)ஆகத் தெரிகிறது.
இதை சரி செய்ய ஒரு நிரல் துண்டை
இந்தச் சுட்டியில் காணலாம்.
Post a Comment