24 : வலையில் சம்பதியுங்கள்
நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.
கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.
மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.
இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.
கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.
கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்
எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.
நன்றி
ஜெ.மயூரேசன்
5 மறுமொழி:
எனக்கு தெரிந்து ஓசை செல்லா சொல்லி இருக்கிறார். வாரம் அவருக்கு 250 கிடைக்குதாம். ஆனால் இதில் உண்மையில் பணம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏமாற்றுவார்கள்.
//பணம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏமாற்றுவார்கள்//
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 1 டாலர் சம்பாதித்துள்ளதாகக் தரவுகள் காட்டுகின்றன. 20 டாலர் வந்ததும் செக் அனுப்பச் சொல்லி சொல்லியுள்ளேன்.
வந்தா மலை போனா .... அதுதான் நம்ம பாலிசி...
இதைப் பயன் படுத்தும் சந்திரவதனா அக்கா அது உண்மை என்று அறிவித்துள்ள வேளையில் இது பற்றி மேலும் சந்தேகப்படுதல் வீணாணது அன்பர்களே!
Go ahead
எனக்கும் விவரம் சொல்லுங்கள். உண்மையில் அப்படி எதாவது வருமானம் வந்தால்
சில சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கும் எண்ணம் இருக்கின்றது.
நான் குறிப்பிட்ட படத்தைக் கிளிக்செய்து அவர்கள் வெப்தளத்திற்குப் போங்கள். அங்கே என்பதைக்கிளிக் செய்யுங்கள். Create a Keyword CPC add (சிபிசி டெக்ட் அட்ஸ் என்பதைக்கிளிக்) செய்யுங்கள் பின்பு படிவத்தில கேட்கப்படும் விடயங்களுக்குப் பதில் போடுங்கள். இதன்பின்பு என்ன பிரைச்சனை என்று சொல்லுங்ள் உதவக்காத்திருக்கின்றேன்.
IF you can't work in this way just go to www.adbrite.com and click singnup now
Post a Comment