62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)
பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குக
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” என்று அக்கறையாக விசாரித்தாள்.
“என்ன செய்வது பையை பிளேடால அறுக்க வேண்டியதுதான்” என்று வியர்வை முகம் எங்கும் வழிய வழியச் சொன்னேன்.
பையைவெட்டுவதற்காக பிளேடை எடுக்கப் போன போதுதான் ஞாபகம் வந்தது பிளேடும் பையினுள்தான் உள்ளதென்பது. சத்தியமாக வாழ்க்கையே வெறுத்து விட்டது.
அதே வேளையில் மற்றய கதிரையில் இருந்த நண்பர்களுக்கு விசயம் கொஞ்சம் மோசமாகப் போய்விட்டது என்பது புரிந்து விட்டது. அவர்களும் பையில் தம்பாட்டுக்கு ஏதேதோ முயன்று பார்த்து சலித்துப் போய் அமர்ந்து விட்டனர். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். அப்போது மீண்டும் அந்த சிங்களப் பெட்டை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டாள்.
இதைத் திறக்க நான் ஜேம்ஸ் பாண்டாகத்தான் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது 07 ஐ ஒருக்கா முயற்சித்துப் பார்ப்போம் என்று. இறைவனைவேண்டியவாறே திறந்த போது என்னே அதிசம் பை திறந்து கொண்டது. எல்லாம் கந்தன் கருணை!!!
வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு எல்லா நண்பர்களையும் பார்த்து, திறந்த விடையத்தை சைகையால் காட்டிச் சிரித்துக்கொண்டு இருந்தேன்.
நான் திறந்து முடித்தபோது சரியாக 1 மணி ஆகிவிட்டிருந்தது. யாரே மூவர் திடீர் என்று ஒரு அறைக்குள் இருந்து வந்து முதலில் முன்னுக்கு இருந்த பொடியனை வரச்சொல்லி கூப்பிட்டார்கள்.
அந்தப் பொடியனின் பட்டப் பெயர் யு.ஜி (UG). அதாவது அளவுக்கதிகமான நேரம் Undergraduate Lab ல் இருந்து இணையத்தைத் துளாவுவான் என்பதால் அந்தச் செல்லப்பெயர். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரனே!
அவன் உள்ளே சென்று அரைமணி நேரம் ஆனது என்ன செய்கின்றார்கள் என்பதே புரியவில்லை. நாங்கள் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தோம். சுமார் 35 நிமிடங்களின் பின்னர் யு.ஜி வெளியே வந்தான். வெளியே வந்தவனை எங்களிடம் வரவிடாமல் வேறேங்கோ அழைத்துச் சென்றார்கள்.
“டேய்...!!!! என்னடா நடக்குது இங்க? இன்டஸ்ரியல் ரெயினிங்குக்கு இது அதிகம்டா” நண்பன் ஒருவன் சலித்துக்கொண்டான்.
சற்று நேரத்தில் ஒரு தலை வெளியே எட்டிப்பார்த்து மஞ்சுளா பிரேமரத்ன... என்று சொல்லியது. அவ்வளவுதான் எனக்குப் பக்கதில் இருந்த சிங்களப் பெட்டை பாய்ந்தடித்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடந்த அறையை நோக்கி ஓடினாள்.
அடுத்தது யாரோ என நினைக்கயிலேயே நெஞ்சு படபடத்துக்கொண்டது. அடுத்த அரை மணி நேரத்தின் பின்பு மஞ்சுளாவும் வெளியே வந்தாள். மீண்டும் அதே தலை எட்டிப் பார்த்து டினூஷ டீ சில்வா என்று சொல்லியது. என் நண்பன் டினூஷ அறையை நோக்கி நடந்தான்.
மீதம் இருந்த மூவரும் மஞ்சுளாவை சுற்றி நின்று கேள்விகளால் ஒரு வேள்வி வைக்கத் தொடங்கினோம்.
“என்ன கேட்டாங்கள்? படிப்பு சம்பந்தமாக் கேட்டாங்களா? பொது அறிவு பார்த்தாங்கள்?” தெரிந்த கேள்வி எல்லாம் கேட்டாங்கள்.
அவளும் கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், VB .net மற்றும் SQL ல் அதிகம் கேள்விகள் கேட்பதாகவும் கூறினாள். அதைவிட யு.ஜி யை ஒரு செய்முறைப் பரீட்சைக்கு அனுப்பிவிட்டதாகவும் தனக்கு அடுத்து நடக்கவுள்ளதாகவும் கூறினாள். எனக்கோ தலை சுற்றத் தொடங்கியது. இப்போ எதுவும் ஞாபகம் இல்லையே!! ???
கடைசியாக என் சந்தர்ப்பமும் வந்தது. நான் பயத்துடன் நேர்முகத் தேர்வு நடந்த அறையை அடைந்தேன். அங்கே மூவர் இருந்தனர். எல்லாரும் நடுத்தர வயது மதிக்கத் தக்கவர்கள்.
நான் உள்ளே போனதும்...
“Hello Sir! I’m Mayooresan” என்று சொல்லி நடுவில் இருந்தவருடன் கையைக் குலுக்கினேன் அவரும் மற்றயவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு என்னை இருக்கச் சொல்லி விட்டு என்னைப் பற்றி அறிமுகம் ஒன்று வழங்குமாறு கேட்னர். நானும் ஒரு அறிமுகத்தை வழங்கினேன். அடுத்து கேள்விக் கணைகள் தொடங்கியது.
1.ரிக்கர்சிவ் பங்சன் ஒன்று எழுதுங்க!!! எனக்கு தலைகால் புரியவில்லை... தந்த காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டுக் கூறினேன். Sorry sir I can’t remember this..!!!
அப்போதும் அவர்கள் விடுவதாக இல்லை அப்படியானால் ஒரு பங்கசன் அதுக்கு எழுதுங்க பார்ப்பம். சரி என்று எழுதி முடித்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு அதில் ஒரு நொட்டை சொன்னான் அந்த நெட்டைப் பயல்.
பின்பு VB .net ல் சில கேள்விகள் கேட்டான். Inheritance பொன்ற OOP சம்பந்தமான கேள்விகள் கேட்டான் சில கவிண்டது சில சரியாகச் சொன்னேன். கடைசியாகக் கேட்டார்கள் எனக்கு ஒரு செய்முறை வைக்க வேண்டும் என்று!!!
உடனே நான் தயங்காமல் சொன்னேன் “ஆ... இண்டைக்கு நான் தயார் இல்லை, இன்னுமொரு நாளைக்கு செய்யலாமா?”
“ஓம் கட்டயாமா!” என்று சொன்னார்கள். அத்துடன் இரண்டு நாட்களின் பின் செய்முறைப் பரீட்சைக்கு வருமாறும் கூறினார்கள்.
இரண்டு நாட்கள் கழிந்து எக்சாம் செய்தேன் லைப்ரரி இன்ஃபோமேசன் சிஸ்டம் ஒன்றை முழுதாக 2 மணி நேரத்தில் செய்ய்ச் சொல்லி இருந்தார்கள். அதற்கு UML படங்களும் வேற கீற வேண்டுமாம். நான் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வந்தேன்.
சரி எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் இன்னுமொரு கம்பனி பார்க்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நாள் மாலை பல்கலைக்கழக வாசலினூடு நுழைந்து கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் வந்து தட்டினார்கள்.
“மயூரேசன் உங்களுக்குத் தெரியுமா நீங்க நாளைக்கு கைட்ராமணிக்குப் போகோனும் என்றது” முன்பு கவிட்ட அதே மிஸ் கேட்டா....
“இல்லை மிஸ்.. எனக்குத் தெரியாது?” பரபரக்கக் கூறினேன்.
“எனக்குத் தெரியும் நீர் தொயாது என்று சொல்லுவீர் எண்டு. அதாலதான் கண்டிட்டு ஓடி வந்தனான்” மிஸ் சிரித்தவாறே கூறினார்.
“நீரும் மிஹிசரவும் செலக்ட் ஆகி இருக்கீங்க நாளைக்கு இருவரும் அங்க போகோணும் உங்களோட அவங்க சில விசயங்கள் கதைக்கோணும் என்று விரும்பிறாங்க” என்று முடித்தார்.
எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதொ கடவுள் புண்ணியத்தில் நல்லதாக நடந்து முடிந்துவிட்டது. உலகவர்த்தக மையத்தில் 3 மாதத்திற்கு சுற்றும் வாய்ப்பும் கிடைத்தது....
நன்றி முருகா!!!! எல்லாம் உன் செயல் :)
சில படங்கள்....
நேர்முகத் தேர்விற்காகச் சென்ற நண்பர் குழாம்
காலைவாரிய பையுடன் மயூரேசன்......
அவசரத் தகவல் தந்துதவிய நண்பன் UG (உண்மைப் பெயர் புத்திக)
7 மறுமொழி:
மயூ, நீங்கள் எனக்கு மடல் அனுப்பினப்ப உண்மையில் உங்க பதிவ படிச்சுக்கிட்டு இருந்தேன்...வாழ்க்கைல சின்னச்சின்ன விசயங்களும் சுவாரசியமா போயிடுது..ஆமா, கந்தனுக்கு ஜேம்ஸ்பாண்டுக்கும் ஏதாச்சும் உள்குத்து இருக்கா :) இந்த பாகத்துக்காக காத்திருந்து படிச்சேன்..நீங்க நல்லா கதை எழுதலாம்னுட்டு நினைக்கிறேன் ;)
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதானே?
வாழ்த்து.
நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்.
அட எல்லாம் நல்லதா முடிஞ்சுபோச்சு,
நானும் ஏதோ ஏடாகூடமா நடந்திட்டுதோ எண்டு நினைச்சன்,
வாழ்த்துக்கள் மயூரேசன்.
கண்ணாடியில எடுத்த படத்தில இடதுபக்கமா கடைசியில நிக்கிற வல்லை தானே மயூரன்??
:)
படமெல்லாம் போடுறியள்.. எங்க அந்த துண்டு??
அதை போடமாட்டீங்களே!!
//நீங்க நல்லா கதை எழுதலாம்னுட்டு நினைக்கிறேன் ;)//
நன்றி ரவி... எந்த உள்குத்தும் கிடையாது.. நான் சில கதைகள் எழுதியுள்ளேன்..
பார்க்க
யாருக்கு இலவசம்
விடுதலை
சீ.. துஷ்டனே
//எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதானே?
வாழ்த்து.
நல்ல சுவாரசியமாக எழுதுகிறீர்.//
நன்றி வசந்தன்...எல்லாம் நல்லபடியாக முடிந்தது...
//அட எல்லாம் நல்லதா முடிஞ்சுபோச்சு,
நானும் ஏதோ ஏடாகூடமா நடந்திட்டுதோ எண்டு நினைச்சன்,
வாழ்த்துக்கள் மயூரேசன்.//
நன்றி நண்பா!
//கண்ணாடியில எடுத்த படத்தில இடதுபக்கமா கடைசியில நிக்கிற வல்லை தானே மயூரன்??
:)
படமெல்லாம் போடுறியள்.. எங்க அந்த துண்டு??
அதை போடமாட்டீங்களே!!//
ஆமாம் அதுதான் நான்...
எதுக்கு பொண்ணுங்க படத்தை அவங்களுக்குச் சொல்லாமல் போடோனும். அது அவங்க பிரைவசி...
Post a Comment