24 November 2006

48 : ஈழத் தமிழர் பற்றி ஒரு ஒலிப்பதிவு

எம்பி3/ MP3 வடிவில் பதிவிறக்க




powered by ODEO

ஏற்கனவே எழுத்தில் போட்ட பதிவு இப்போ ஒலியில் கேட்டுப்பாருங்களேன்....

7 மறுமொழி:

said...

page currently not available!

said...

மயூரேசன், இது உங்க குரலா ஆச்சர்யமா இருக்கு..உங்களிடம் தொலைபேசில பேசினப்ப வேற மாதிரி இருந்துச்சு..நல்ல உச்சரிப்பு, ஏற்ற இறக்கக் குரல், தெளிவான உரை. பல வானொலி நிருபர்களுக்கு எந்த விதத்திலும் குறையாத குரல். தொடர்ந்து இது போல் ஒலிபரப்பு செய்யுங்கள். இலங்கையில் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள தகவல்களை நம்பகமான ஒருவரிடம் இருந்து அறிய முடியும். ஒரு விதயம், உங்கள் வலைப்பதிவ திறந்த உடன ஒலிக்கோப்பு தானா ஓட ஆரம்பிச்சிடுது. அத நாமளா துவக்கிற வைக்கிற மாதிரி நல்லது. ஏனா, இது பிற இடுகைகளில் இருந்து திசை திருப்புது. ஒரே பக்கத்துல பல ஒலிக்கோப்புகள் இருந்தாலும் பிரச்சினை ஆகும்.

said...

மயூரேசன்,
நல்ல முயற்சி. இன்னும் முழுமையாகக் கேட்டு முடிக்கவில்லை. இவ் ஒலிப்பதிவில் சொல்லப்பட்டுள்ள சில தகவல்கள் தவறானவை என்பதைத் தாழ்மையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எமது இனத்தின் போராட்டம் பற்றி கடந்த இரு வருடங்களாக பல ஆய்வுகள் செய்து வருபவன் என்பதால் பல வரலாற்று நூல்களைப் படித்தும் பல கல்விமான்களுடன் விவாத்தித்தும் வருகிறேன். அதன் அடிப்படையில் தான் சொல்கிறேன். குறிப்பாக, எமது இனத்தின் போராட்டத்தின் ஆணிவேர் 1948 ல் ஆரம்பமானது என்று ஒலிப்பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது. அது தவறு என்பதே என் தாழ்மையான கருத்து. எமது போராட்டத்தின் ஆணிவேர் 1918 ம் ஆண்டே ஆரம்பமானது. சிங்களத் தலைவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தமிழர்களை ஏமாற்றிய போது, முதன் முதலில் Tamil League எனும் அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தாயகம் ஒன்று உண்டென்றும் , அதில் அவர்கள் இரண்டாம் தரக் குடிகளாக வாழமுடியாது என்றும் முழங்கியவர் Sir பொன். அருனாச்சலம் அவர்கள். அதன் பின் G.G.பொன்னம்பலம் 50 - 50 க்காகப் போராடியதும் 1948 முன்னரே. சிங்கள மொழியே தனி அரச மொழியாக இருக்க வேண்டும் எனும் தீர்மானத்தை முதன் முதலில் J.R. ஜெயவர்த்தனா 1948க்கு முதலே கொண்டு வந்ததையும் நினைவுகூர விரும்புகிறேன். J.R. அச் சட்டத்தைக் கொண்டு வந்த போது முழுமையாக எதிர்த்த சிலரில் திரு.பண்டாரநாயக்காவும் முக்கியமானவர்.தமிழும் அரச மொழியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று முழங்கிய அதே பண்டாரநாயக்காதான் பின்னர் தனிச் சிங்களச் சட்டத்தைப் பிறப்பித்தார் என்பது வரலாறு. ஆக தமிழர்களின் போராட்டம் 1918 களில் துவங்கியது. பின்னர் 1948 ல் சிங்களவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் போனதால் மிகவும் மோசமடைந்தது என்பதுதான் வரலாறு.

said...

நன்றி ரவிசங்கர். என்ன வானொலி அறிவிப்பாளர் தரத்திற்கு என் குரல் உள்ளதா??? ஆச்சரியமாக உள்ளது. மற்றயது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

said...

வெற்றி நீங்கள் கூறுவது சரியே! ஆயினும் நான் சொல்ல வந்தது என்னவெனில் 1948 ன் பின்னரே சராசரித் தமிழனும் போராட்டத்தில் தானும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்துகொண்டான். அதையே நான் குறிப்பிட விழைந்தேன்.

said...

மயூரேசன் அவர்களே

உங்கள் ஒலிப்பதிவை கேட்டேன். மனசு கனத்துப் போனது. புலம் பெயர்ந்த ஈழ மக்களுக்கு என்று விடிவுகாலம் ஏற்படும்?

எங்களின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைதான் இன்னமும் எங்களுக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

இருந்தாலும் அப்பழுக்கற்ற சாதாரண ஈழத் தமிழர்கள் நலம் பெற வேண்டும் என் மனசு ஒப்பி ஆண்டவனை பிராத்திக்கிறேன். நல்லதே நடக்கும்.

மெலட்டூர்.இரா.நடராஜன்.

said...

மயூரேசா,

புன்னகை வரவழைக்கும் கவிதைகளும் சின்னஞ்சிறு கதைகளும் எழுதி வந்த என் தம்பியா இது?

சீரான கருத்துக் கோவைகள், நிகழ்வுகளை ஒப்பு நோக்கும் பார்வை என ஒவ்வொரு வரியிலும் நடந்தவற்றை உன் பார்வையில் விவரித்ததை நான் கேட்டேன் என்பதை விட உணர்ந்தேன். ஈழத்தில் நடைபெறும் பிரச்சினைகள் குறித்து இருதரப்பு வாதங்களும் அறியாமல் எக்கருத்தும் கொண்டிருப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆயினும் என்றாவது அங்கே நிம்மதியும் வாழ்க்கைச் சூழலும் திரும்ப வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

உன் பார்வைகள் எனக்கு இன்னொரு பரிமாணத்தைக் காட்டின என்பதில் மறு கருத்தில்லை. தெளிவான உச்சரிப்பு, நல்ல ஒலிப்பதிவு, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த, ஆனால் செய்தி வாசிப்பது போன்ற (உண்மை நிகழ்வுகள் குறித்துக் கருத்து ஏதுமின்றிச் சொல்லும்போது இப்படித்தான் இருக்கும்) வெளிப்பார்வைகளை என்னால் இதை முதல்முறை கேட்கும்போது பார்க்க இயலவில்லை என்பதே உன் கருத்துகள் என்னுள்ளே சென்றன என்பதற்கான சான்று!

உன்னுடன் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் அதிகரிக்கிறது.

அன்புடன்,
பிரதீப்