46 : ஓ.... சிக்கண் குணியா
ஆட்டக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக மயூரேசனையும் கடித்து விட்டது சிக்கன் குனியா!!!
மூன்று நாட்களாகக் கடும் காய்ச்சல். மூட்டுக்களெல்லாம் இன்னமும் வலிக்கின்றது. இதை எழுதுவதற்காக தட்டச்சிடும்போது விரல்கள் முடியாது முடியாது என்று மன்றாடுகின்றன. தலைக்குள்ளே ஏதோ பல லட்சம் இரயில் வண்டிகள் ஓடுகின்றன....
பட்டுப்பார்த்தாத்தான் தெரியும் என்று சொல்லுவார்கள்... நான் சிக்குன் குனியாவை அனுபவித்துவிட்டேன்... கடவுளே இப்படி உடம்பை முறிக்கின்றதே!!
இப்போ கொழும்பிலும் சிக்கன் குணியா பரவத் தொடங்கியுள்ளது. தமிழக அரசிடம் இவர்கள் ஆலோசனை கேட்பார்களோ??
10 மறுமொழி:
நல்ல வைத்தியம் செய்யவும்.சத்தான சாப்பாடு சாப்பிடவும்.
யோகன் பாரிஸ்
தற்போது பரவாயில்லை காய்ச்சல் விட்டுவிட்டது... உடல்வலிதான் முறிக்கின்றது!!! இன்று இரவு கம்பஸ் பார்ட்டியும் கெட்டுவிட்டது.. நன்றி வைசா அவர்களே
அன்புடன்,
மயூரேசன்
மருந்துப் பலத்தோடு மனப்பலத்தையும் உங்களுக்குக் கொடுத்து பூரணசுகமடைய வேண்டுகின்றேன். கொதித்தாறிய தண்ணீரை அருந்துங்கள், பனானா லீப், சரஸ்வதி லொட்ஜ் பக்கம் கொஞ்ச நாள் தலைகாட்டாதேங்கோ.
இது வைரசுக் காய்ச்சல் என்பதால் மருந்து இல்லை தானாகக் குணமடைய வேண்டும். லாட்சுகளுக்கு இப்போதைக்குப் போற எண்ணம் அடியோடு இல்லை... பட்டது போதுமடா சாமி.... ;-)
அன்புடன்,
மயூரேசன்
அங்கும் வந்து விட்டதா? நல்ல சத்துள்ள உணவுகளை உண்டு நோய் எதிர்ப்பை ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும் பிறகு தான் வைத்தியம் மருந்து.
சீக்கிரம் குணமடையுங்கள்
//ஆட்டக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியாக மயூரேசனையும் கடித்து விட்டது சிக்கன் குனியா!!!//
தம்பி,மயூரேசன் அறியத் தருவது!தாங்கள் நலம் பெறவேண்டுமென்று மனதார விரும்புகிறேன்.மேலே தாங்கள் ஒரு பேச்சுக்கு-பேச்சோசைக்கு ஏதுவாக"ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு"என்று தொடர்கிறீர்கள்...இதன் தர்க்கம் வேறுவிதமாகப் புரிந்துகொள்வதும் நீங்கள் புரியாததில்லை.
உங்களுக்கு முதல் "சிக்கன் குன்யாவால்"பாதிப்படைந்தவர்கள்,இறந்தவர்களெல்லாம் ஆடும் மாடுமா தம்பி?
ஏதோ யோசிங்க!
தமிழக அரசிடம் ஆலோசனையா?
என்ன ஆலோசனை? எப்படி சிக்கன் குனியாவே எங்கள் ஊரில் இல்லை என்று சப்பை கட்டு கட்டுவது எப்படின்னா? ;)
மயூரேசன், சுகாதாரம் காக்க வேண்டும். திறந்த சாக்கடை இல்லாத இடமே இல்லை.
இவ்வளவு வருஷம் ஆகியும் கொசுவ ஒழிக்கலையே நாம்.
அனுபவித்துதான் ஆகவேண்டும், நீங்களும், நானும்.
sorry.
get well soon. :)
மயூரேசன்!
விரைவில் குணம்பெற வாழ்த்துக்கள்.
வருத்தம் விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்...
ஆடு மாடு என்று நான் யாரையும் சொல்லவில்லை... நான் நகைச்சுவைக்காக கூறியதை நீங்கள் தூக்கிப்பிடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!!
தமிழ் நாடு அரசு மட்டும் சிக்குண் குனியாவிற்காக என்ன செய்துவிட்டது என நினைக்கிறீர்கள்?
சென்னையில் ஆரம்பித்த இந்த வியாதி எங்கோ தமிழ் நாட்டின் நடுப்பகுதியில் இருக்கும் புதுக்கோட்டைவரை பரவி விட்டது. நான் இங்கு வெளியே இருப்பதால் தப்பித்தேன்.
லெ. ராமசாமி
Post a Comment