MLTR – Micheal Learns To Rock என்பது ஆங்கிலத்தில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த இசைக் குழுவின் பாடலை பிரபல இந்திப் பாடகர் ஷான் சில தடவை ஹிந்தியில் பாட யாம் கேட்டோம். ஆயினும் தமழில் அப்படியான முயற்சிகள் நடைபெறவில்லை.
ஆயினும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் அதில் ஷாம் மற்றும் ஜோ தோன்றுகின்றார்கள். யாரோ அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார்கள். என் நண்பனிடம் இருந்து வீடியோவைப் பெற்றுக் கொண்டேன். நான் நினைக்கின்றேன் அதாவது இந்தப் பாடல்காட்சிகள் 12 பீ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என் ஆசைப் பாடலிற்கு என் ஆசை தமிழ் நட்சத்திரங்கள் வந்து போகின்றார்கள். பாடலின் வரிகளிற்கு ஏற்றவாறு படத்தொகுப்பு செய்துள்ளவரிற்கு பூப்போட்டுப் பாராட்டலாம். அந்தக் கனவான் யாரோ தெரியாது???
சரி இனி வீடியோவைப் பாருங்கள். வீடியோவின் கீழே ஆங்கில பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன...
7 மறுமொழி:
பாடலை ரசித்தேன்.
நன்றி மயூரேசன்.
நல்லா தொகுத்திருக்காங்க மயூரேசன்.. கடைசியில் அந்த விபத்தும், ஆபரேஷனும் தான் நம்மூரு படம்னு காண்பித்துவிட்டது :)
நன்றாக இருக்கிறது பாடல்.
வாயசைவுகள் இல்லாமல் இப்படி பாடற்காட்சிகள் வந்தால் இம்மாதிரி முயற்சிகள் இலகுவாகும். பாலுமகேந்திராப் படப்பாடல்கள் பலவற்றுக்கு இப்படிச் செய்யலாமென்று நினைக்கிறேன்.
மைக்கேல் ஜாக்சன் முதலானவர்களின் வீடியோக்களுக்கு எங்கள் தமிழ்ப்பாடல்களைப் பொருத்தி அருமையாக தொகுத்திருப்பார்கள். ஏதாவது வீடியோ பார்த்திருக்கறீர்களா?
இதில அக்கா மகளை மைக்கல் ஜக்சன் துரத்திறார்.
http://www.metacafe.com/watch/197592/michael_jackson_tamil_version/
//பாடலை ரசித்தேன்.
நன்றி மயூரேசன்//
நன்றி சந்திரவதனாக்கா உங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும்..
//கடைசியில் அந்த விபத்தும், ஆபரேஷனும் தான் நம்மூரு படம்னு காண்பித்துவிட்டது :) //
ஆமாம் பொன்ஸ் அவர்களே!
இது 12 பி படம்... என்று நினைக்கின்றேன்....
//இதில அக்கா மகளை மைக்கல் ஜக்சன் துரத்திறார்//
வசந்தன்!!! படு தூள்!!!
Post a Comment