31 October 2006

41 : அடம் பிடிக்கும் தமிழ்மணம்

எனது மற்றய வலைப்பதிவான ஹாலிவூட் பார்வை மற்றும் இந்த வலைப்பதிவான தமிழ் வலைப்பதிவில் இருந்து பதிவை தமிழ்மணம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. உதவிகோரி வந்துள்ளேன்!!! கீழ் கண்ட பிழைச் செய்தி வருகின்றது.

Cannot query database. Have you run install.php? MySQL says: Duplicate entry '2147483647' for key 1

என்ன பிழையாக இருக்கும் என்று யாராவது சொல்லி அருள்வீர்களா!

தேன்கூடு எந்தப் பிரைச்சனையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டது. தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். அட்டைப்பலகையில் பிழை இருப்பதாகத் தெரியவில்லை ஏனெனில் புது அட்டைப்பலகை போட்டும் பிரைச்சனை தீரவில்லை.



உதவி உதவி உதவி!!!!!!!

30 October 2006

40 : சிம்சன் தொலைக்காட்சித் தொடரின் காட்சிகளைப் பதிவிறக்க


உலகப்புகழ் பெற்றது சிம்சன் கார்டூன்கள். இது சிறுவர்கள் பார்க்கக் கூடியதாக இருப்பினும் பெரியோருக்காகத் தயாரிக்கப்பட்டதே.

இந்த பக்கத்தில் சிம்சன் கார்டூன் ஆரம்பக்காலத்தில் எடுக்கப்பட்ட சில கிளிப்புகளைத் தருகின்றது.

பதிவிறக்கிச் சிரித்து மகிழ

டெக்னாரடி பகுப்புகள்


27 October 2006

39 : சுவிட்சர்லாந்தின் கழிவறை

வெளிப்புறம்


உட்புறம் சென்றபிறகு

என்ன பார்த்தபின்பு இதற்காகவாவது சுவிற்சர்லாந்து போகலாம் போல இருக்குதா???

38 : நாசா (NASA) போகலாம் வாங்க

வாழ்க்கையில் ஒரு தடவையாவது நாசாவைப் பார்த்துவிடத் துடிப்பவரா நீங்கள்..

அப்போ வாருங்கள் பாருங்கள். என்ன தொட்டு உணர முடியாவிட்டாலும் பார்த்து உணருங்கள்..









24 October 2006

36 : Engineer இல்லாத உலகம்

கீழே இருக்கும் படங்களைப் பாருங்கள். பொறியியளாளர்கள் இல்லாவிட்டால் இந்த உலகு எப்படி இருந்திருக்கும் என்று கீறியுள்ளார்கள். இது சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும்தான்!!!






















20 October 2006

35 : வெர்ச்சுவல் (Virtual) தீபாவளி பட்டாசு



எங்கள் எல்லாருக்கும் தீபாவளி அன்று பட்டாசு கொளுத்த விருப்பம்தான் ஆனால் சிறு வயதில் எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தா??

இல்லை.. இக்குறையைத் தீர்க்க இதோ வந்திருக்கின்றது வேர்ச்சுவல் பட்டாசு கொழுத்தி மகிழுங்கள்...

சுட்டிக் கொழுத்து

34 : இலங்கை இலவசக் கல்வியின் தந்தை


இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.

இலங்கையின் இலவசக் கல்வியைப் பற்றிப் பார்க்க முன்னர் இலவசக் கல்வியின் தந்தையைப் பற்றி ஒரு சிறு குறிப்பைப் பார்ப்போம்.

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.

இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இது குறிப்பாக படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்தே ஏற்பட்டுள்ளது. இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே முன்னய அரசின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும். எனக்கு தனியார் கல்விக் கூடங்களை அமைப்பதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லாதபோதும் ஊருடன் ஒத்து வாழ் என்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றேன்.

இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. இவர்கள் செய்வதெல்லாம் இங்கே முதலாம் வருடத்தை முடியுங்கள் பின்பு பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் விரும்பும் பல்கலைக் கழகத்தில் மிகுதியைத் தொடருங்கள். வெறும் 5 விழுக்காடு மாணவர்களே பல்கலைக்கழகத் தகுதி பெறும் போது மிகுதி மாணவர்களுக்கு இதைவிட வேறு வழி என்ன?. இந்த முறை இப்போது இலங்கையில் மிக வேகமாக பிரபலமாகிக்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன செய்வார்கள்?? இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?

இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தனியே அரச கல்வி நிறுவனங்கள்தான் இயங்கவேண்டும் என்று இருந்திருந்தால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்வியில் இன்று இருப்பதைப்போல சர்வதேச தரத்திலான பாடநெறிகளை வழங்கிஇருக்க முடியாதுதானே?

எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!

16 October 2006

33 : ஈழத் தமிழருக்கு என்ன போர் வெறியா???

இலங்கையில் இன்றய நிலமை தற்போது தமிழகத்தில் பெரும் குளப்பத்தை தூண்டி விட்டு இருக்கின்றது. இது உணர்வுகளுடன் தொடர்பு பட்ட விடயம் என்பதால் தமிழகக் கட்சிகள் யாவும் இதன் மூலம் குளிர்காய முயற்சிக்கின்றன. சிலர் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் தற்போது திடீர் என்று ஈழத்தமிழர் பால் அன்பு செலுத்துவது சந்தோஷத்திற்குப் பதிலாக வேதனையைத் தருகின்றது. காரணம் தற்போதய நிலமை சிறிது தணிந்ததும் அவர்கள் ஈழத் தமிழர்களை மீண்டும் மறந்து விடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.

இந்தக் கட்டுரை தமிழகத் தமிழர்களுக்காகவே எழுதுகின்றேன். ஈழத் தமிழர்களின் பிரைச்சனை பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையை இக்கட்டுரை அவர்களுக்கு வழங்கும் என்று நம்புகின்றேன்.

ஈழப்பிரைச்சனையின் ஆணி வேர் 1948 ல் தொடங்குகின்றது. 1948 ல் இலங்கை பிருத்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன்போது இலங்கையில் இருந்த அப்போதய தமிழ் தலைவர்கள் தாம் சிங்களவருடன் இணைந்து வாழமுடியும் என்று நம்பிக்கை கொண்டு இருந்ததால் தமக்கு இணைந்த நாட்டையே வழங்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அன்று ஈழத் தமிழ் தலைவர்கள் அவ்வாறு கேட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. எ-கா. கொழும்பில் தமிழர்களே உயர் பதவிகளை வகித்தனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட தமிழர்களே உயர் பதவிகளில் இருந்தனர். நாட்டின் உயர் கல்விப் பீடங்களில் தமிழ் மாணவர்களே மிக உச்ச அளவில் இருந்தனர். ஆகவே அவர்கள் நாட்டை பிரிக்கும் தேவை இருந்ததாக உணரவில்லை.

சிங்களவர் மனதில் சாதுவான நெருடல் பழைய காலம் முதலே இருந்து வந்தது. காரணம் தமிழர்களே அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றார்கள் என்று. ஆயினும் இதற்கான காரணம் பிருத்தானியரின் பாடசாலைகள் போன்ற கல்வீத்தாபனங்களை யாழ்ப்பாணத்திலே அமைத்தனர். இதன் காரணமாகவே தமிழர்கள் உயர் பதவிகளை அடையக் கூடியதாக இருந்தது.

ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் நிலமை தலைகீழாக மாறத் தொடங்கியது அதன் முதல் படிதான் தனிச் சிங்களச் சட்டம். இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றிய புண்ணியவான் முன்நாள் இலங்கைப் பிரதமரும் சந்திரிக்காவின் தந்தையுமாகிய எஸ்.டபிள்யு.பண்டாரநாயக அவர்கள். 1958 ல் இவர் இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அங்கு அவரிற்கு வரவேண்டிய பதவி வராமல் விடவே விரக்தியில் சில இடது சாரிக்கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு சுதந்திரக்கட்சியை அமைத்தார்.

இலகுவாக ஆட்சியைப்பிடிக்க அவரிற்குத் தெரிந்த ஒரே வழி சிங்களவரின் உணர்வுகளைத் தட்டிவிடுவதே. அதனால் தனது தேர்தல் விஞ்ஞாபத்தில தான் ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்தில் சிங்களத்தை தனி ஆட்சி மொழிஆக்குவேன் என்று உறுதி அளித்தார். ஏற்கனவே தமிழர் மீது சாதுவான பொறாமை கொண்டிருந்த சிங்களவர் தம் வாக்குகளை பண்டாரநாயக்கவிற்கு வழங்கி ஒரு பெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினர். இத்தனையும் செய்த பண்டார நாயகாவை ஒரு பெளத்த பிக்கு துப்பாக்கியால் சுட்டமையையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்காவும் அதை அவ்வாறே நிறைவேற்றிக்காட்டினார். அன்று முதல் இன்று வரை தமிழர்கள் இலங்கை நடுவண் அரசினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து தமிழ்கட்சிகள் காலி முகத்திடலில் பெரும் சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்தனர். காத்தியத்தை பின்பற்றி போராடியவர்களை அன்று இலங்கை அரசு குண்டர்களைக் கொண்டு அடக்கியது. சத்தியாக்கிரகம் செய்தவர்களை பொலீசாரின் பாதுகாப்புடன் குண்டர் குழுக்கள் தாக்கினர். இவ்வாறு பல தடவைகள் தமிழரின் அஹிம்சா போராட்டம் மோசமாக நசுக்கப்பட்டது.

1960 ல் பண்டாரநாயக்காவின் துணைவியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிநாலும் அவரும் கணவரின் பாதையைப் பின்தொடர்ந்தார். இவரின் காலத்தில் சிங்கள மொழிச்சட்டம் கடுமையாக்கப் பட்டதுடன் அரச சேவையில் இருந்து பல தமிழர்கள் சிங்களம் தெரியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர்.

1965 ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் தமிழிற்கு சட்டத்தில் ஒரளவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்பு 1970 களில் தமிழிற்கு அந்தஸ்து வழங்கப்பட்டதையும் ஐ.தே.க திறந்த பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த சுதந்திரக்கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

1971 ஏப்ரலில்தான் இன்றய இனவாதக் கட்சியான JVP உருவானது. இது வொரு தீவிரவாதக் குழுவாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் எந்த அடிப்படைக் கொள்கைகளும் இல்லாத இவர்கள் அன்றய அரசினால் நசுக்கி ஒடுக்கப்பட்டனர்.

1972 ஸ்ரீமா பண்டாரநாயக தலமையிலான அரசு புதிய அரசியல் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் சிலோன் என அறியப்பட்ட நாடு ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் காணப்பட்ட சரத்துகளால் தமிழினதும் சிறுபாண்மை மக்களான முஸ்லீம்களினதும் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதாவது பெளத்த மதம் நாட்டின் முதன்மை மதம் என்றும் இலங்கை பெளத்த நாடு என்றும் அது கூறியது. இக்காலப் பகுதியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்ததுடன் ஜயவர்த்தனா பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார் (ஐ.தே.க). பாராளுமன்றத்தில் தமிழீழ மாநிலத்தை வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு தமிழ் கட்சி பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெறுவதைப் பொறுக்க முடியாது ஜயவர்த்தனா 1978 ல் புதிய அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொண்டார். இப்புதிய யாப்பு மூலம் அரச அதிபர் நாட்டின் அதியுயர் சக்தி பீடமாகவும் மாற்றப்பட்டது.

இவ்வேளையில் ஒரு சட்டத்தின் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் தமிழ் மாணவர்கள் ஒரம் கட்டப்பட்டு. குறைந்த வெட்டுப்புள்ளியுடன் சிங்களமாணவர்கள் தெரிவாக வழிசமைத்தனர். தமிழரின் சொத்தாம் கல்வியும் கடைசியாகப் பறிக்கப்பட்டது. இது இள இரத்தங்களை தூண்டி விட்ட முழு முதற் காரணி.

1982 காலப்பகுதியில் இளைய இரத்தங்கள் மெல்ல மெல்ல வன்முறை நோக்கித் திரும்பத் தொடங்கியது. இக்காலத்திலே புலிகள் உட்பட பல கொரில்லா குழுக்கள் தோற்றம் பெறத் தொடங்கின. இவர்களிற்கு ஆதரவு தமிழகத்திலிருந்து இந்திய அரசின் ஆதரவுடன் கிடைத்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புலிகள் தம்மை தனி முத்திரையிட்டு மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டியதும் இக்காலப்பகுதிதான்.

இதற்குப் பின்னர் பல தடவைகள் ஈழத்தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் உச்சக்கட்டம்தான் 1983 கலவரம். இதன் பின்னரே உதவி கோரி தமிழகம் செல் ஈழத்தமிழர்கள் தலைப்பட்டனர். இதன் போது சிங்களக் காடையர் தமிழர்களின் இருப்பை இலங்கையில் கேள்விக் குறியாக்கினர். தலைநகரத்தில் தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொலை செய்யப்பட்டனர். இவை அனைத்தையும் இலங்கை அரசு சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

இதன் பின்னர் நடந்தவை யெல்லாம் நீங்கள் அறிந்தவையே! அவையெல்லாம் ஈழத்தமிழரிற்கும் இந்தியாவிற்கும கசப்பான நிகழ்வுகள். தனியே புலிகள் மட்டும் குற்றம் செய்தவர்கள் என்று கூறி முடிப்பதற்கில்லை. பாரத மாதாவின் படைகள் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்தது என்ன என்பதையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.

இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.

நான் இங்கு கோடிட்டு காட்டியது சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இது போல பல நிகழ்வுகள் இங்கு நடந்தேறிவிட்டன. இனியாவது புதிய யுகம் இந்த மக்களிற்குப் பிறக்குமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

11 October 2006

32 : உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள்.

உலகின் சிறந்த 200 பல்கலைக்கழகங்கள். வழமை போல அமெரிக்காவின் ஹாவாட் பல்கலைக்கழகம் முதல் இடத்தில் உள்ளது இரண்டாம் மூண்றாம் இடங்களில் முறையே கேம்பிரிச், ஒக்ஸ்போட் உள்ளன. இதைவிட மூன்று இந்தியப் பல்கலைக்கழகங்களும் முதல் 200 இடத்தினுள் உள்ளன.

கீழே கிளிக் செய்து பாருங்கள். சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகமும் தெரிவாகியுள்ளது. வழமைபோல இலங்கையில் இருந்து ஒரு பல்கலைக்கழகமும் தெரிவாகவில்லை.


இந்தியா
1. Indian Institute of Technology
2. Indian Institute of Management
3. Jawaharlal Nehru University

சிங்கப்பூர்
1. National University of Singapore
2. Nanyang Technological University


அனைத்தையும் காண......

7 October 2006

31 : இளைஞர்களின் சுப்ரபாதம்


இன்றய இளைஞர்கள் சமய விடயங்களில் அதிகம் நாட்டம் காட்டுவதில்லை என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக கோவில் செல்வதில்லை, சென்றால் அதன் பின் பல காரணங்கள் இருக்கும். இப்படிப் பட்டியல் மோசமாக நீளுகின்றது.

இந்த நிலையில் இருந்து மீள என்ன செய்யலாம் அவர்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இங்கே நான் ஒரு எம்.பி3 கோப்பை இணைத்துள்ளேன். அதைப் பதிவிற்க்கிக் கேட்டுப்பாருங்கள். சத்தியமாக அடித்துச் சொல்கின்றேன் அது சுப்பிரபாதம்தான்.

இப்போதெல்லாம் காலையில் இந்த சுப்பிரபாதத்தைக் கேட்காமல் பல்கலைக்கழகம் போவதேயில்லை. அப்பிடி என்ன விஷேஷம் இதில் என்று நீங்கள் கேட்பது புரிகின்றது பதிவிறக்கித்தான் பாருங்களேன். இதைச் செய்த புண்ணியவான் யாரோ தெரியவில்லை.....

உங்கள் காலையும் இந்த சுப்பரபாதத்துடன் அருமையாக அமைய வாழ்த்துக்கள்....

பதிவிறக்க...

6 October 2006

30 : எனக்கு எப்போ விடுதலை - தேன் கூடு போட்டிக்காக.


யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள்.

பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு தந்த உள்ளம் இது.

“அம்மாவும் எனக்கு மண்ணள்ளி வீசி தூற்றினவதானே... இப்ப இந்த கடற்காற்றும் மண்ணை வாரி இறைச்சுத் தூற்றுது”. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே அவள் கடகடவென வெளியே செல்கின்றாள். விறாந்தையில் நாகலிங்கம் அண்ணே நின்றுகொண்டு இருந்தார்.

“வாங்கோ அண்ணே!”

நாகலிங்கம் நல்ல கறுப்பு நிறம். சாரம் அணிந்து கையில் மீனுடன் அஜானபாகுவாக வெறும் மேலுடன் நின்றிருந்தான். முதற் பார்வையிலேயே யாரும் சொல்லிவிடுவர் அவன் கடலில் சென்று மீன் வேட்டையாடும் வேட்டைக்காரன் என்று. விமலாவிற்கும் யாழ்ப்பாணத்தின் வட கரையிலுள்ள இந்த மீனவ சமூகத்திற்கும் ஒரு பந்தம் ஏற்பட்டு இருந்தது.

“பிள்ள.. இந்தா இண்டைக்கு தொழிலில கிடைச்சது”. கையில் இருந்த இரண்டு விள மீன்களை நீட்டினான். விமலாவும் வாங்கிக்கொண்டாள்.

“சின்னத்தம்பியின்ற போட்டில தான் நெற்று இரா போனான். நல்லா மீன் விழுந்திச்சுப் பிள்ள.. எனக்கு இராவும் ரஞ்சனைப் பற்றித்தான் நினைப்பு” அவர் முகத்திலும் சோகத்தின் ரேகைகள் படரத்தொடங்கியது.

“அப்ப நான் வாறன்”

“சரி அண்ணே”

விமலா மீனை எடுத்துக் கொண்டு குசுனிக்குள் போனாள். அவள் மீனை எடுத்து ஒரு மண்சட்டிக்குள் போட்டாள். என்னொரு சட்டிக்குள் சிறிது நீர் எடுத்து அதனுள் இந்த மீனை இட்டு நன்கு கழுவிக் கொண்டாள். அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் முன்னாள் வைத்தாள். லாவகமாக பெரிய கத்தி ஒன்றை விரல்களுக்கிடையில் செருகிவிட்டு நறுக் நறுக் என்று மீனை வெட்டத் தொடங்கினாள். நன்கு பழகிய கை தொடர்ந்து மீன்னை வெட்டிக்கொண்டு இருந்தது. இடைக்கிடை நெற்றியில் விழும் கூந்தலை தன் பிறங்கையால் மேவிக்கொண்டாள். இப்போ அவள் நினைவுள் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை நோக்கி நகரத்தொடங்கியது.

“அடியே வெக்கம் கெட்ட நாயே.. உனக்குப் போயும் போயும் அந்த மீன்பிடிக்கிறவனா கிடைச்சான்??” மங்களம் வெறி பிடித்தவள் போல சத்தம் இட்டுக் கொண்டு இருந்தாள்.

பாவம் மங்களம் தன் மகளின் எதிர்காலம் பற்றி பல கற்பனைக் கோட்டைகள் கட்டிக்கொண்டு இருந்தவளிற்கு அவளின் மகளின் நடத்தை அப்படிக் கோவத்தைத் தூண்டி விட்டுடிருந்தது.

“முன் வீட்டு சுந்தரம் எத்தன தரம் உன்னப் பற்றி சொல்லேக்க நான் நம்பேல.. என்ற மேள் இப்படியெல்லாம் செய்யாள் எண்டு அவனுக்கு விடுக்கா உறைக்கிற மாதிரிச் சொன்னனான். இப்ப பார்த்தா..” அதற்கு மேல் பேச முடியாமல் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள் மங்களம்.

முன்னுக்கு விறாந்தையில் விமலாவின் தந்தையார் என்ன பேசுவது என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். சாய்மனைக் கதிரையில் காலை மேலே தூக்கிப் போட்டுக் கொண்டு இருந்த அவர் கண்களில் இருந்து கண்ணீர் மெல்ல மெல்ல பொசிந்து கொண்டு இருந்தது. ஒரே ஒரு பிள்ளை எண்டு செல்லமா வளர்த்தன் இப்பிடிச் செய்வாள் எண்டு நான் கொஞ்சமும நினைக்கேலையே.. தனக்குள் புலம்பினார் அந்த பாசமுள்ள தந்ததையார்.

வாசலில் யாரோ சத்தமிடுவது கேட்கவே மூவரும வாசலிற்கு வந்து பார்தனர். அங்கே ரஞ்சன்.

“விமலா.. நீ வா என்னோட.. இனியும் இவயளோட இருக்கலாம் எண்டு நினைக்கிறியே !” வாசலில் வந்து விடுக்காகச் சத்தமிட்டான் ரஞ்சன்.

அப்பாவியான விமலாவின் தந்தை குமரேசன் செய்வதறியாது திகைத்து நின்றார். அக்கம் பக்கத்து வீட்டுச் சனங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்த்தொடங்கிவி்ட்டது.

இந்த வேளையில் விமலா குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய முன்வீட்டுக்காரன் சுந்தரம் வெளியே வந்து குமரனுடன் வாக்கு வாதப்படத் தொடங்கினான். இருவரும் பேச்சு முத்தி கைகலப்பில் ஈடுபடத் தலைப்பட்டனர்.

இந்த வேளையில் விமலா ஒரு புதுமைப் புரட்சி செய்யத் தலைப்பட்டாள். சட சட வென்று வெளியே வந்தாள்.

“ரஞ்சன் சயிக்கிள எடு நாங்க போவம்.. இங்க நிண்டு தேவையில்லாம சண்டை போடாத” விடு விடு எனப் பேசி முடித்தாள்.

ஒரு கணம் அனைவரும் திகைத்து நின்றனர். அவர்களில் முதலில் சுதாகரித்துக் கொண்டது விமலாவின் தாயார்தான்.

முன் முற்றத்திற்குச் சென்று வாய்க்கு வந்த படி திட்டத்தொடங்கினாள். பின்ன என்ன அவளுக்கு வலிக்காதா. 21 வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த் தன் மகளை நேற்று வந்தவன் இப்படி அலேக்காக தூக்கி சயிக்கிளில ஏத்திக்கொண்டு போறத எந்தத் தாய்தான் பார்த்துக் கொண்டு இருப்பாள். கோபத்தின் உச்சக் கட்டமாக மண்ணை வாரி ரஞ்சனையும் விமாலாவையும் நோக்கி வீசி திட்டத்தொடங்கினாள்.

அன்றைக்குப் பிறகு தாயையும் தந்தையையும் விமலா சந்திக்கவில்லை. சில தடவை பருத்தித்துறை சந்தையில் கண்ட போதும் அவர்கள் இவளுடன் கதைக்கவில்லை. பின்னர் தற்போது அவர்களின் பெறா மகனின் உதவியுடன் கனடாவில போய் இருக்கினம் என்று அறிந்து கொணடாள். அவர்களும் இவளைத் தொடர்புகொள்ளவில்லை இவளும் அவர்களைத் தொடர்புகொள்ளவில்லை.

சிந்தனையில் மூள்கியவாறே சமையலில் ஈடுபட்டு இருந்தவளை வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்கவே திடுக்கிட்டு கனவுலகில் இருந்து மீண்டாள். வாசலில இருந்து கூப்பிட்டது ரஞ்சனின் அக்கா சிவரஞ்சினி.

“வாங்கோ..மச்சாள்..”

“அம்மா என்னபாடு??” வழைமையான கேள்வி.

“அதே நிலைமைதான் மச்சாள்” இவளும் வழமையான பதிலைச் சொன்னாள்.

பெற்ற தாய் வருத்தத்தில் வருந்தும் போது புதிதாய் வந்த மச்சாளிடம் அதைப் பாரமாகக் கருதி விட்டுக்கொடுத்த பெருமை இந்த சிவரஞ்சினியைச் சேரும்.

தாய் இருந்த அறையினுள் சென்ற சிவரஞ்சினி தாயை ஒருக்கால் பார்த்துவிட்டு வெளியே வந்தாள். வழமை போலப் பின்னர் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

“அம்மா எப்பிடி யெல்லாம் இருந்தவ தெரியுமே??. அவர் ஒருக்கால் கூட மற்றயவளிட்ட ஒண்டும் கேக்கிறதில்லை இப்ப இப்பிடி இருக்கிறா” விமலாவிற்கு இவையெல்லாம உறைக்கவில்லை காரணம் தினம் தினம் கேட்கும் புலம்பல் தான் இது.

“ரஞ்சனக் கூட உன்ன மாதிரி நல்ல மனசிருக்கிற உன்னட்ட இருந்து..”

“இப்ப என்னத்துக்கு மச்சாள் தேவையில்லாம வேற விசயங்களக் கதைக்கிறியள்” சிவரஞ்சினியின் புதிய அலட்டலைக் தன் அரட்டல் மூலம் கட்டுப்படுத்தினாள் விமலா.

ஒரு நாள் கடற்தொழிலுக்கு விமலாவின் கணவன் ரஞ்சன் சென்றான். கடலில் இலங்கை கடற்படையின் பீரங்கிப்படகின் சுடுகலனின் கோரப்பிடியில் இவர்கள் சென்ற படகு மாட்டுப்பட்டது. படகில் சென்ற அனைவரும் மீண்டு வந்துவிட்ட போதும் ரஞ்சன் மட்டும் வரவில்லை. இன்றுடன் ஆண்டுகள 4 கழிகின்றன. ஆயினும் விமலா மட்டும் நம்பிக்கை இழக்கவில்லை.

தற்போது சிவரஞ்சினி வேறுவிடயங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். அவளின் கடைசி மகனின் குறும்பு தொடக்கம் தென் இந்தியாவின் பொதிகை சானலில் நேற்று அவள் பார்த்த எம்.ஜி.ஆர் இன் படம் வரை புட்டுப் புட்டு வைத்தாள். விமலாவும சும்மா ஒப்புக்கு தலையை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

“இந்த அம்மா மனுசி போய் துலைஞ்சுட்டுது எண்டா எனக்கும் விடுதலை கிடைச்ச மாதிரி. நானும் அடிக்கடி இங்க வந்து நேரத்த மினக்கடுத் தேவையில்ல” கூறியவாறே விடைபெற்றாள் சிவரஞ்சினி.

சிறிது நேரத்தில் விடைபெற்றுக் கொண்டு சிவரஞ்சினி சென்று விட்டாலும் அவள் தொடங்கின கதை விமலாவின் மனக் கண்ணின் முன் ஓடத்தொடங்கியது. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது.

மச்சாளிற்கு மாமி செத்தாத்தான் விடுதலை. எனக்கு மாமியும் செத்துப் போனால் யார் இருக்கினம்??. நானும் இந்தக் கடலில விழுந்து சாக வேண்டியதுதான்.

எனக்கு எண்டைக்கும விடுதலையில்லை. விடுதலை எண்டு நினைச்சு வீட்டில இருந்து நான் வெளிக்கிட்ட நாளில இருந்து விடுதலை இல்லாமப் போயிட்டுது. உண்மையான விடுதலை நான் வீட்டில அப்பா அம்மாவோட இருக்கேக்கதான் இருந்தது.

குசினியின் ஓரத்தில் இருந்து விமலாவின் விசும்பல் மெல்ல கேட்டுக் கொண்டே இருந்தது. அடுப்பில் இருந்த மீன்கறி கருகத் தொடங்கி விட்டதை அறிவிக்கும் முகமாக அவ்விடத்தில தீய்ந்த வாடை அடிக்கத் தொடங்கியது.

5 October 2006

29 : FLAMES போட்டுப் பாருங்க

ஒரு படத்தில சிலம்பரசன் FLAMES போட்டுக்காட்டி அதில அஜித்குமாரையும் சாலினியையும் போட முடிவு M என்று வந்ததே ஞாபகம் இருக்கா!

அந்த முயற்சியை இப்போ யாரோ புண்ணியவான் மென்பொருளாகச் செய்துள்ளார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயரையும் உங்கள் காதலி பெயரையும் இட்டுப்பாருங்கள் முடிவு வரும்

இனி FLAMES இல் உள்ள ஒவ்வொரு எழுத்துக்குமான கருத்துகளை ஒரு தடவை ஞாபகப்படுத்திவிடறேனே!

Fநண்பி அல்லது நண்பன்
Lகாதலன் அல்லது காதலி
Aவெறும் எதிர்ப்பால் கவர்ச்சி
M - திருமணம்
E - எதிரி
Sஅட சகோதரி இல்லீங்க ஸ்வீட் ஹாட் அப்படி எண்டு வரும்...

இனி செயலியை பதிவிறக்குங்கள்.....

4 October 2006

28 : ஜோதிகா & ஷாம் ஆங்கிலப் பாடலில்

MLTR – Micheal Learns To Rock என்பது ஆங்கிலத்தில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த இசைக் குழுவின் பாடலை பிரபல இந்திப் பாடகர் ஷான் சில தடவை ஹிந்தியில் பாட யாம் கேட்டோம். ஆயினும் தமழில் அப்படியான முயற்சிகள் நடைபெறவில்லை.

ஆயினும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் அதில் ஷாம் மற்றும் ஜோ தோன்றுகின்றார்கள். யாரோ அழகாக படத்தொகுப்பு செய்துள்ளார்கள். என் நண்பனிடம் இருந்து வீடியோவைப் பெற்றுக் கொண்டேன். நான் நினைக்கின்றேன் அதாவது இந்தப் பாடல்காட்சிகள் 12 பீ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. என் ஆசைப் பாடலிற்கு என் ஆசை தமிழ் நட்சத்திரங்கள் வந்து போகின்றார்கள். பாடலின் வரிகளிற்கு ஏற்றவாறு படத்தொகுப்பு செய்துள்ளவரிற்கு பூப்போட்டுப் பாராட்டலாம். அந்தக் கனவான் யாரோ தெரியாது???

சரி இனி வீடியோவைப் பாருங்கள். வீடியோவின் கீழே ஆங்கில பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன...








Artist: Michael Learns To Rock Lyrics
Song: You Took My Heart Away Lyrics

Staring at the moon so blue
Turning all my thoughts to you
I was without hope or dream
Try to dull an inner scream
But you . . . saw me through . . .

Walking on a path of air
See your faces everywhere
As you melt this heart of stone
You take my hand to guide me home and now I’m in love

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .

Living in a world so cold
You were there to warm my soul
You came to mend a broken heart
You gave my life a brand new start
And now . . . I ’m in love

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .

Holding your hands
I won’t fear tomorrow
Here where we stand
We never be alone

You took my heart away
When my whole world was grey
You gave me everything and a little bit more
And when it’s cold at night
And you sleep by my side
You become the meaning of my life . . .
You become the meaning of my life . . .
You become the meaning
You become the meaning of my life . . .

The hottest songs from Michael Learns To Rock

3 October 2006

27 : கல்கியின் இ-புத்தகங்கள் (e-books) இலவசமாக

தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........
தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar & Acrobat Reader)

உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

1. பொன்னியின் செல்வன்
2. பார்த்தீபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. சோலைமலை இளவரசி

பதிவிறக்குக


மெலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....

2 October 2006

26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா???

தமிழ் கணனியியலில் புதிய யுனிக்கோட் முறை ஒன்று தற்போது பரீட்சாத்தமாகப் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (TAmil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ் கணனியியல் ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.

யுனிக்கோடு (Unicode) முறைமை யுனிக்கோடு கான்சட்டேரியம் (Unicode Consortium) எனும் நிலையத்தால் அமைக்கப்பட்டது. இந்த முறையில் உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட யுனிக்கோடு முறமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்சட்டேரியத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன.

IISCI முறைமையில் இருந்து யுனிக்கோடு முறைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே யுனிக்கோட் என்கோடிங்கில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக Complex Script ஆக வரத்தேவையில்லாத தமிழ் மற்றய இந்திய மொழிகளைப்போல Complex Script ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Complex Script பொதுவாக லெவல் இரண்டு மொழிகள் ஆகும். எ-கா ஹிந்தி, சீனம், ஜப்பானீஸ். தமிழும் லெவல் இரண்டு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் லெவல் ஒன்று மொழிகள் ஆகும்.

லெவல் ஒன்று மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செயலி தயாரிப்பவரோ இயங்குதளமோ இதற்கான Core Level ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு மென்பொருள்களிலேயே நாம் தமிழ் யுனிக்கோடைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். Level one மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செயலியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ் கணனியியல் மிக வேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக் மற்றும் சில லினக்ஸ் (சில லினக்ஸ் இயங்கு தளங்கள் ஆதரவு வழங்குகின்றன) இயங்கு தளங்களில் (Operating System) இன்றும் தமிழ் யுனிக்கோடு ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.

போ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது யுனிக்கோடு முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்
1. இரட்டைக்கொம்பு
2. ப னா
3. அரவு
ஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் கோப்புக்கள் சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.

இவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய என்கோடிங் முறமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் பரீட்சித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை யுனிக்கோட் கொன்சட்டேரியத்திற்கு அறிவித்தது. ஆயினும் யுனிக்கோட் கான்சட்டோரியம் வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.

மாற்று வழியானது யுனிக்கோடில் தனிப்பட்ட பயனர் பிரதேசத்தில இட்டு பரீட்சித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private Use Area (PUA) of the Unicode space to startwith). அவ்வாறே தற்போது 16 பிட் முறைமையில் தமிழ் புதிய என்கோடிங் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சாத்த முயற்சியில் உள்ளது.

இதை பயன்படுத்திப் பார்க்க தமிழ் கணனி ஆர்வலர்கள், தமிழ் கணனி செயலி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய யுனிக்கோடு முறமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் ஆன உதவியையும் வழங்குங்கள்.

இதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.

எது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே!

மூலங்களைத் தரவிறக்க...

1. http://groups.yahoo.com/group/tune_rfc/ - To Discuss regarding this matter in Yahoo group
2