20 October 2006

34 : இலங்கை இலவசக் கல்வியின் தந்தை


இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது.

இலங்கையின் இலவசக் கல்வியைப் பற்றிப் பார்க்க முன்னர் இலவசக் கல்வியின் தந்தையைப் பற்றி ஒரு சிறு குறிப்பைப் பார்ப்போம்.

கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர் அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.

இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இது குறிப்பாக படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் இருந்தே ஏற்பட்டுள்ளது. இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது.

ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே முன்னய அரசின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும். எனக்கு தனியார் கல்விக் கூடங்களை அமைப்பதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லாதபோதும் ஊருடன் ஒத்து வாழ் என்பதற்காக ஆர்ப்பாட்டத்திற்குச் சென்றேன்.

இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. இவர்கள் செய்வதெல்லாம் இங்கே முதலாம் வருடத்தை முடியுங்கள் பின்பு பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் விரும்பும் பல்கலைக் கழகத்தில் மிகுதியைத் தொடருங்கள். வெறும் 5 விழுக்காடு மாணவர்களே பல்கலைக்கழகத் தகுதி பெறும் போது மிகுதி மாணவர்களுக்கு இதைவிட வேறு வழி என்ன?. இந்த முறை இப்போது இலங்கையில் மிக வேகமாக பிரபலமாகிக்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு என்ன செய்வார்கள்?? இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?

இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும். தனியே அரச கல்வி நிறுவனங்கள்தான் இயங்கவேண்டும் என்று இருந்திருந்தால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் கல்வியில் இன்று இருப்பதைப்போல சர்வதேச தரத்திலான பாடநெறிகளை வழங்கிஇருக்க முடியாதுதானே?

எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!

4 மறுமொழி:

said...

நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல எதிலும் இப்படித்தான் மயூரேசா!

said...

தற்போதைய நிலமையில் இலங்கைக்கு இலவசக் கல்வி அவசியம். அதைக் காரணம் காட்டி தனியார் கல்லூரிகளைத் தடுப்பது முட்டாள் தனம்.
வளர்ச்சி அடையும் நாடு ஒன்றில் இலவசக் கல்வி தேவைப்டலாம். ஆனால் சிங்கப்பூரில் இலவசக் கல்வி என்பது தேவையில்லாத ஒன்று!

said...

மயூரேசன்
இலவசக்கல்வி என்பது எந்த நாட்டிலும் இருப்பது நல்லது என்றே நான் நினைக்கிறேன்.

said...

பணம் பிரைச்சனை இல்லா இடத்தில் இலவசம் என்பதைவிட தரம் என்பதே பார்க்கப்படும். இதையே மார்கெட் செக்மென்டேசனில் பயன்படுத்துகின்றார்கள். வருகைக்கு நன்றி சந்திரவதனா அக்கா!