28 September 2006

25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்

நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.

கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.

மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.

இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.

கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்



எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.

நன்றி
ஜெ.மயூரேசன்

24 : வலையில் சம்பதியுங்கள்




நீங்கள் பொதுவாக ஆங்கில வலைப்பதிவுகளில் பார்த்து இருப்பீர்கள் கூகிள் அட்சென்ஸ் எனும் முறை மூலம் விளம்பரங்களை அவர்களின் தளத்தில் இட்டுருப்பார்கள். இதைப் போன்று நம் வலைப்பதிவுகளிலும் நாம் விளம்பரங்களை இடலாம்.

கூகள் அட்சென்ஸ் விளம்பரங்களை உங்கள் தளத்தில் இடுவதானால் உங்கள் தளம் ஆங்கிலம், பிரஞ்சு, ஜப்பான் போன்ற மொழிகளில் இருக்கவேண்டுமாம். இன்னும் தமிழ் மற்றம் இந்திய மொழிகளுக்கான ஆதரவு வழங்கப்படவில்லை. நானும் முயற்சித்துப் பார்க்கும் முகமாக எனது வலைப்பதிவில் விளம்பர வசதி வேண்டி விண்ணப்பித்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர்கள் அப்படிச் செய்ய முடியாது என்று மறுத்து விட்டனர். என்தளம் தமிழில் இருப்பதால் மறுத்து விட்டனர். சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல நானும் பதில் கடிதம் போட்டேன். அதில் சில தமிழ் வலைப்பதிவுகள் கூகள் அட்சென்சைப் பாவிக்கின்றபோது நான் ஏன் பாவிக்க முடியாது என்று கேள்வி எழுப்பினேன். அதற்கு அவர்கள் தமக்கும தமது வாடிக்கையாளருக்கும் இடையில் இருக்கும் விஷயங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர்.

மனமுடைந்து கிட்டத்தட்ட அந்த முயற்சியைக் கைவிட்டு இருந்த நேரத்தில் கடவுள் போல வந்ததுதான் Adbrite சேவை. இது பற்றி சந்திர வதனா அக்காவின் பக்கத்தில் அறிந்து கொண்டேன். அதாவது அவரும் இதைப் பாவித்துக்கொண்டு இருந்தார்.

இவர்கள் கூகள் அட்சென் போன்று தமிழ் தளத்திற்கு மட்டும் தான் உதவுவோம் மற்றவர்கள் பொறுக்க வேண்டும் என்றெல்லாம் அலுப்பு அடிப்பதில்லை.

கீழே உள்ளபடத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது உங்கள் தளம் பற்றிய குறிச்சொல்களை கேட்பார்கள். இறுதியில் உங்களுக்கு ஒரு கோட் வழங்கப்படும் அதை உங்கள் வலைப்பதிவில பதிந்து விட்டீர்கள் என்றால் சரி உங்கள் தளத்திலும் விளம்பரங்கள் வரும். உங்கள் தளத்திற்தில் விளம்பரம் இட ஒரு நாளைக்கு எவ்வளவு என்றும் நீங்கள் குறிப்பிடலாம். அதன்பின்பு அட்பிரைட் தானே உங்கள் தளத்திற்கான விளம்பர வாடகையைத் தீர்மாணித்து விளம்பரதாரர்களுடன் தரகர் வேலை பார்க்கும். அது வேண்டாம் என்றால் மனுவலாக நீங்களே எவ்வளவு பணம் வேண்டும் என்று குறிப்பிடலாம். அப்புறம் என்ன சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

கீழே உள்ள படத்தை கிளிக் செய்து அவர்கள் தளத்திற்கு நுழையுங்கள்



எனக்குத் தெரிந்த அளவில் உங்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக உதவக் காத்து இருக்கின்றேன். அதாவது டெம்பிளேட்டில் எங்கு கோட்டைப் போடுவது போன்ற விடயங்களுக்கு. உங்கள் பிரைச்சினைகளை இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள் நான் இயன்றவரை விரைவாகப் பதில் அளிக்க முயல்கின்றேன்.

நன்றி
ஜெ.மயூரேசன்

27 September 2006

23 : Goal! The Dream Begins (2005) - திரைவிமர்சனம்

கோல் என்றால் இலக்கு என்று பொருள்படும். இந்தக் கதையும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் ஒரு இளைஞனைப்பற்றிய கதையே ஆகும்.

மெச்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு களவாக குடி பெயர்கின்றது சன்டியாகோவின் குடும்பம். சன்டியாகோவின் தாயார் சிறு வயதிலேயே வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறிவிட தந்தையின் வளர்ப்பிலே சன்டியாகோவும் அவன் தம்பியும் வளர்கின்றனர். இவர்களுக்கு ஒரு பேத்தியாரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



மெச்சிக்கோவில் இருந்து வெளியேறி அமெரிக்காவினுள் நுழையும் தறுவாயில் அமெரிக்க எல்லைக் காவல் படையிடம் இருந்து மயிர் இழையில் இந்தக் குடும்பம் தப்புகின்றது. தப்பும் வேளையில் அந்தச் சிறுவனுக்கு கால்பந்தாட்டம் மீது இருக்கும் நாட்டத்தைக் காட்ட சிறு காட்சி ஒன்றைச் சேர்த்துள்ளார்கள். அதாவது இவர்கள் எல்லையில் உள்ள வேலியைக் கடந்து அமேரிக்காவினுள் நுழையும் தறுவாயில் மெச்சிக்கோப் பக்கம் சிறுவனின் பந்து விழுந்து விட அதைவிட்டு விட்டு வர மனமில்லாமல் தடுமாறுகின்றான். இருந்தபோதும் தந்தையின் அதட்டலுக்குப் பயந்து பந்தை விட்டு வருகின்றான். அப்போது அவன் முகத்தில் தெரியும் ஏமாற்றம் பாருங்கள்.......

பத்து வருடங்களின் பின்பு லாஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் இந்தக் குடும்பம் தங்கிவிட்டபோதும் பொருளாதார ரீதியாக பின்தங்கியே இருக்கின்றது. இதே வேளையில் அந்தச் சிறுவன் தற்போது இளைஞனாகி நிற்கின்றான். அவனுக்குள் ஆசைகள் இருக்கின்ற போதும் தந்தை அவனது ஆசைகளை நோக்கி கனவுகளை வளர்க்க விடுவதில்லை. அப்துல் கலாம் கூறிய இளைஞர்களே கனவு காணுங்கள் என்ற வாக்கியம் அவன் தந்தைக்குப் புரியவில்லை.

ஒரு ஏழைக் குடும்ப வாலிபன் தான் தன்னை மீறி கனவு காணக்கூடாது என்பதே அவரது வாதம். பல தடவை தந்தை மகனை இந்த விடயத்தில் கண்டிக்கின்றார்.

இதே வேளையில் இந்த இளைஞன் சன்டியாகோவின் கால்ப் பந்தாட்ட விளையாட்டுத் திறமையைப் பார்த்த இங்கிலாந்துக் காரர் ஒருவர் அவனுக்கு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கின்றார். அவரின் முயற்சகள் தோல்வி அடையவே சன்டியாகோவை இங்கிலாந்துக்கு வருமாறும் அப்படி வந்தால் தான் சந்தர்ப்பத்தை வாங்கித் தருவதாககும் கூறி விடை பெறுகின்றார்.

கனவுகளில் மீண்டும் மிதக்கும் இளைஞனுக்கு அவனது தந்தை கட்டுப்பாடு போடுகின்றார். இது வீண் கனவு என்றும் தன்னைப்போல தன் மகனும் குடும்பத்திற்காக உழைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.



தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து செல்வதற்காக சன்டியாகோ பணம் சேர்க்கத் தொடங்குகின்றான். ஆயினும் சேர்த்த பணம் எல்லாம் அவனது தந்தை ஒரு ட்ரக் வேண்டப் பயன்படுத்தி விடுகின்றார். அனைத்தும் வெறுத்துப் போய் விரக்தியுடன் உலாவும் இந்த இளைஞன் அவனது பாட்டியின் உதவியுடன் தந்தைக்குத் தெரியாமல் இங்கிலாந்து பயணம் ஆகின்றான்.

இங்கிலாந்தில் இளைஞன் தனது வெற்றிக்காக உழைப்பதையும் இறுதியில் ஒரு வெற்றிகரமான தொழில் ரீதியான கால்பந்தாட்ட விளையாட்டு வீரனாக மாறினானா என்பதுமே மிகுதிக் கதை.

இது வாழ்கையில் துவண்டு போய் இருப்பவர்கள் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இளைஞர்கள் தோல்வியில் துவண்டு விடாமல் இருக்க இந்தப்படம் உதவி செய்யலாம்.

இங்கிலாந்தில் அந்த இளைஞன் படும் துன்பம் இருக்கின்றதே பாருங்கள். அளவிட முடியாது. அவன் பிரகாசிக்க முடியாமல் திணறுவதையும் அவன் கற்பனைகள் கரைவதையும் பார்க்கும் போது எமக்கும் தான் கவலை ஏற்படுகின்றது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் அவன் முயற்சிகள் பயனளித்ததா என்பதை திருட்டு டீவிடீ வேண்டியாவது பாருங்கள்.

திரையில் நாயகன் நடிப்புடன் கொஞ்சம் திணறுவதைக் காண முடிகின்றது. ஆனால் கால் பந்துடன் சுழன்று சுழன்று கலக்குகின்றார். ஆயினும் மற்றய துணை நடிகர்களின் நடிப்பாற்றலால் நாம் இவரின் குறையைக் கண்டு கொள்ள முடிவதில்லை. குறிப்பாக இங்கிலாந்திற்கு இவரை அழைக்கும் முன்னய கால்பந்தாட்ட வீரர் மற்றும் சன்டீயாகோவின் காதலி போன்றோர் நடிப்பில் கலக்குகின்றனர்.

இத்திரைப்படம் ஆரம்பத்தில் இயக்குனர் மைக்கல் வின்டர் பொட்டம் என்பவருடனே ஆரம்பித்தது. ஆயினும் அவர் இதிலிருந்து விலகிக்கொண்டார். காரணம் இந்த திரைப்படத்தில் உண்மையான கால்பந்தாட்ட கழகங்களின் பெயர் பயன்படுவதால் பீஃபா (FIFA) தன் அனுமதியைப்பெற வேண்டும் என்று கூறிவிட்டது. கோபப்பட்ட மனுசன் விட்டுட்டுப்போய்விட்டார்.

இத்திரைப்படத்தின் மிகுதி 2 பாகங்கள் மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

பிகு : இந்த திரைப்படத்தில் பிரபல கால்பந்தாட்ட வீரர், முன்னய இங்கிலாந்து கால்பந்தாட்ட அணித் தலைவர் பெக்காம் ஒரு காட்சியில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

25 September 2006

22 : சீ.. துஷ்டனே


கதிரவன் சதிராடத் தொடங்குகின்ற நேரமது. பட்சிகள் கீச்சிடுகின்றன, வண்டுகள் ரீங்காரமிட்டவாறே அன்றலர்ந்த பூக்களைத் தேடி ஓடுகின்றன, தேனீக்கள் அவற்றுடன் போட்டியிடுகின்றன. எங்கோ தூரத்தில் ஒரு ஆண் குயில் துணை தேடி இசை பாடுகின்றது. இயற்கையை இரசித்தவாறே இரு துறவிகள் நடந்து வருகின்றனர். உலக நியதிகளைப்பற்றி அலசி ஆராய்கின்றனர்.

“குருவே ! இந்த வையகத்தில் இத்தனை அழகு இருந்தும் ஏன் இந்த மானிடர்கள் அதை விடுத்து அறியாமையில் மாட்டித் தவிக்கின்றார்கள்?”

“ஹூம்.... அது அவர்கள் ஊழ்வினை, முற்பிறப்பில் செய்த ஊழ் வினையை இப்பிறவியில் அனுபவிக்கின்றார்கள். எல்லாம் அவன் செயல்..”

“அப்போ விதியை வெல்ல முடியாதா குருவே!” ஆர்வமாகக் கேட்கிறான் அந்த இளவயது சீடன்.

“நிச்சயமாக முடியும் அதற்கு நீ இவ்வுலகின் நிலையாமையை முதலில் உணர வேண்டும். பணம், பெண், பாசம், உறவுகள் அனைத்துமே பொய் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயினும் பலபேர் அதை உணர்ந்து கொள்வதில்லை”.

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டு வரும் வேளையில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆற்றில் அப்போது சிறிது அதிகமாகவே வெள்ளம் ஓடிக்கொண்டு இருந்தது. அதற்குச் சான்றாக கரையிலே வெள்ளம் நுரைகளைத் தள்ளியவாறே துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டு இருந்தது.

இத்தனைக்கும் மேலே ஆற்றங்கரையிலே ஒரு அழகுப் பதுமை போன்ற இள நங்கை ஒருத்தி நின்று கொண்டு இருக்கின்றாள். அவள் கண்களில் பயம் தெரிகின்றது. ஆற்றின் வெள்ளம் பாவம் அவளை மிரட்சி அடைய வைத்துவிட்டது. மான் விழிகளை உருட்டி உருட்டி அங்கும் இங்குமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள். இவ் வேளையில் இரு துறவிகளும் இந்த நங்கையைத் தாண்டிப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.

“குளந்தாய்! ஏன் இங்கே தனியே நின்று கொண்டு இருக்கின்றாய். காட்டு மிருகங்கள் உலாவும் இடமிது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்று விடு” பரிவுடன் கூறினார் குருநாதர்.

“துறவியாரே! ஆற்று வெள்ளம் புரை கடந்து ஓடுகின்றது. பார்க்கவே பயமாக இருக்கின்றதே??”

“பயப்பட வேண்டாம். நான் இதைக் கடந்துதான் செல்லப் போகின்றேன்” இவ்வாறு கூறிவிட்டு குருநாதர் கட கட வென ஆற்றைக் கடக்கத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் ஆற்றைக் கடந்து மறு கரையேறிய துறவியார் தன் சீடனைக் காணவில்லையே என்றெண்ணி பின்னால் திரும்பிப் பார்த்தார். ஐயகோ! என்ன அநியாயம் அவரினால் அவர் கண்களையே நம்ப முடியவில்லை.

எனது சீடனா இது?? சீ இவனைப் போய் என் சீடனாக ஏற்றுக்கொண்டேனே. சலித்துக்கொண்டார் குருநாதர். ஆற்றின் மறு கரையிலே சீடன் அந்த நங்கையை தன் தோழில் தூக்கி அமர்த்தி ஆற்றைக் கடந்து கொண்டு இருந்தான்.

தற்போது சீடன் பெண்ணைக் கொண்டு வந்து மறுகரையில் இறக்கி விடுகின்றான். பெண் தலை கவிழ்ந்து நன்றி சொல்லி விட்டு அவ்விடத்தில் இருந்து நகர்கின்றாள்.

குருநாதர் எந்தப் பேச்சும் இன்றி விறு விறு என நடக்கின்றார். இவன் தன் குருவிடம் ஏற்பட்ட மாற்றத்தை உணராத சீடனும் இல்லை.

அந்திமாலை நேரமது, சிறிது நேரத்தில் இருட்டப்போகின்றது. சூரிய சம்ஹாரம் செய்துவிட்ட களிப்பில் சந்திரன் வானத்திலே நட்சத்திரங்களுடன் உலாவரத் தொடங்குகின்றான். எங்கும் குளிர்மை எதிலும் குளிர்மை. செடி கொடிகள் தம்மை சிலுப்பிக்கொண்டு நிற்கின்றன, பற்றைகளில் இருந்து பூச்சிகள் ஒரு வித ஒலியை எழுப்பி இருட்டின் மர்மத்திற்கு மர்மம் சேர்க்கின்றன. ஆயினும் குரு நாதரின் உள்ளம் மட்டும் அனலாய் கொதித்துக் கொண்டு இருந்தது.

“குருநாதரே! தங்களிடம் அடியேன் சிறு மாற்றத்தை காண்கின்றேன். தங்கள் உள மாற்றத்திற்கான காரணத்தை அடியேனுக்கு விளம்புவீர்களா?” பெளவியமாகக் கேட்டான் சீடன்

“சீ.. துஷ்டனே! உன்னைப் போய் என் சீடனாக ஏற்றுக் கொண்டேனே!. ஒழிந்து போ! என் கண்முன்னே நிற்காதே. நான் இவ்வளவு போதித்த பின்பும் அந்தப் பெண்ணைத் தீண்ட உனக்கு என்ன தைரியம்?. இக்கணம் முதல் நீ என் சீடன் இல்லை. உன்கை கறை படிந்த கை. பரந்தாமனிற்கு பூப் பறிக்கும் உன்கை அந்த பாவையைத் தொட எப்படித் துணிந்ததோ?”. தன் உள்ளக் கிடக்கை கொட்டித் தீர்த்தார் குருநாதர். ஆவேசத்தில் மேல் மூச்சு கீழ்மூச்சும் வாங்கிக்கொண்டார்.

“ஓ. அதுவா பிரைச்சனை! ஆற்றங்கரையில் சுமந்த பெண்ணை மறு கரையில் யாம் இறக்கிவிட்டோம். குருநாதா தாங்கள் இன்னும் சுமக்கின்றீர்கள் போல உள்ளதே!”

அத்தனை இருளிலும் தன் சீடன் ஒரு அறிவு வெள்ளமாக குருவிற்குத் தெரிந்தான். கண்களில் கண்ணீர் மல்க தன் சீடனை ஆரத் தழுவினார் அந்தக் குருநாதர். அவரின் கண்களில் இருந்து வழிந்தது ஆனந்தக் கண்ணீர் அல்ல தன் அறியாமையை எண்ணி வெட்கியதால் ஏற்பட்ட கண்ணீர்.

21 September 2006

21 : ஒரு பாடலில் ஒரு திரைப்படம்

ஒரு திரைப்படத்தை ஒரு பாடலினுள்ளேயே அடக்கி விடலாமா??? விடை ஆம். உங்களிற்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் கீழே உள்ள வீடியோ பாடலைப் பாருங்கள்.

திரைப்படத்தில் இருக்க வேண்டிய நாயகன், நாயகி, காதல், பெற்றோர் எதிர்ப்பு, கிராமம், மழை, பாடசாலை, தோல்வி, ஏக்கம் எல்லாமே உண்டு.






இது ஒரு சிங்களப்பாடல். சிங்களம் புரியாது என்று கவலைப் படாதீர்கள். பாடலைப் புரிந்து கொள்ள நீங்கள் வாழ்க்கையில் பத்து தமிழ் திரைப்படம் பார்த்திருந்தால் போதுமானது.

தற்போது இளசுகள் மத்தியில் பிரபலமாகி வரும் இராஜ் என்பவர் இசையமைத்த பாடல் இது. ஹிந்தி இசையில் களிக்கும் சிங்களவரை சிங்கள இசையை நோக்கி திரும்ப வைத்துக்கொண்டு இருப்பவர்களில் ஒருவர். இந்தப் பாடலில் நாயகியின் குடை பறந்து போய் ஒரு பஜுரோவில் மாட்ட அதை எடுக்க நாயகன் ஓடுவார். அந்த பஜுரோவில் குறுந் தாடியுடன் வருபவர்தான் இசைஅமைப்பாளர் இராஜ்.

பாடல் வரிகளை சிட்னி சந்திரசேகர என்பவர் எழுதியுள்ளார். பாடகியும் பிரபலமான சிங்களப் பாடகியே!.

பாடலில் வரும் நாயகன் கடைசியாக நடந்த Sirasa Super Star (American Idol போன்ற சிங்கள இளைஞர்களுக்கான போட்டி) ல் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். அருமையாகப் பாடலை அனுபவித்துப் பாடியுள்ளார். இவரின் உண்மையான பெயர் மலித் இந்தப் பாடலிலும் இவரின் பெயர் மலித் என்றே பயன்பட்டுள்ளது.

நாயகனின் நாயகி பாடசாலையில் நடனம் ஆடுவதைப் ஒளிந்து நின்று பார்க்கின்ற போது தலமை ஆசிரியர் அதைக் கண்டு நாயகனைக் கண்டிக்கின்றார் அப்போது நடக்கும் உரையாடலை ஒரு உதாரணத்திற்கு உங்களிற்காக தமிழில் தருகின்றேன்.

த.ஆ : மலித் இங்க என்ன செய்யிறாய்?

மலித் : ஒன்றும் இல்லை சேர்

த.ஆ : என்ன பாக்கிறாய் உள்ளுக்குள்ள பெரஹெரா வருகுதா?

மலித் : ஓம் சேர்... இல்ல சேர்

நாயகி நடப்பதைப் பார்த்து சிரிக்கின்றார் (பாடலில் இவரின் பெயர் சஞ்சலா)
த.ஆ : ஓம் சேர்! இல்ல சேர்! நீட்டுடா கையை

மலித் கையை நீட்டுகின்றான் அடிகள் வீழ்கின்றது. சஞ்சலாவின் முகம் கறுத்து அழத் தொடங்குகின்றார். சஞ்சலாவின் நடன ஆசரியர் சஞ்சலாவிடம் கேட்கின்றார்..

“மலித்திற்குத்தானே அடி வீழ்ந்தது சஞ்சலா என்னத்திற்கு அழுகின்றாய்??”

இவ்வளவிற்குப் பின்பும் என்ன தயக்கம் கிளிக் செய்து பாடலைப் பாருங்களேன்.

20 September 2006

20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்

உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!









எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை




http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3



என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.



மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:



அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.



உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.



எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...



முதலில் இங்கே



http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.



அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.









வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.







அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.







இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.







பிறகு Next-ஐத் தட்டுங்கள்







அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.







அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.









அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.











இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.



முன்னேற்பாடுகள்



நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.







மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.











இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.



பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.



தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்









முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.



'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.



உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.



தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...



ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm


தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!



இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.


இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.

19 September 2006

வாழ்க்கையின் நான்கு கட்டங்கள்

பொதுவாக வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டுகின்றோம். சிறு வயதில் விளையாட்டுகள் வயது வந்ததும் பொறுப்புக்கள்... இப்படி பட்டியல் நீளும்..

கீழே உள்ள படத்தைப் பாருங்கள் வாழ்க்கையின் நான்கு பருவத்தில் தேவைப்படும் நான்கு திரவங்கள்...

Photobucket - Video and Image Hosting

பொ(ய்)ன் மொழிகள்

  • நீங்கள் படித்து எந்த சார்டிபிகேட்டும் (Certificate) வாங்கலாம் ஆனால் உங்கள் டெத் சார்ட்டிபிகெட்டை உங்களால் வாங்க முடியாது
  • நீங்கள் ஏர்டெல்லோ டயலோக்கோ வைத்திருக்கலாம் ஆனால் தும்மும் போது உங்களுடன் வருவது ஹட்ச் மட்டுமே
  • இன்ஜீனியரிங் காலேஜில் படித்து இன்ஜினியர் ஆகலாம் பிரசிடன் காலேஜில் (President College) படித்து பிரசிடன் ஆக முடியுமா?
  • மெக்கானிக்கல் இன்ஜின்னீயர் மெக்கானிக் ஆகலாம் ஆனால் சாப்வேர் இன்ஜினீயர் சாப்வேர் ஆக முடியுமா?
  • தேனீ்ர் கோப்பையில் தேனீரைக் காணலாம் ஆனால் உலகக் கோப்பையில் உலகத்தைக் காணமுடியாது
  • கீ போட்டில் (Key board) கீகளைக் (Key) காணலாம் ஆனால் மதர் போட்டில் (Mother board) மதரைக் (Mother) காணலாமா?


அன்புடன்

மயூரேசன்

15 September 2006

17. ஆவிகள் பற்றி கண்ணதாசன்

(1).மொபைல் கோர்ட் நீதிபதிகள்.

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். ‘கிருஷ்ணா !; ‘கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் ‘முருகா’ என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் ‘கெட்டது நடக்கும்’ என்றும், ஒரு காகிதத்தில் ‘நல்லது நடக்கும்’ என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று ‘நல்லது நடக்கும’ என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை’ என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.



மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்...........

14 September 2006

பிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு

கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டாவும் கைவிரித்த பிளாக்கர் உதவிக்குழுவும்

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நன்றாக வேலை செய்து கொண்டு இருந்த எனது பிளாக்கரில் தேவையில்லாமல் சில மாற்றங்கள் செய்யப்போய் இறுதியில் கையைச் சுட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

ஒரு நாள் வேலை செய்து கொண்டு இருக்கும் போது தேவையில்லாமல் பிளாக்கர் பீட்டாவிற்கு எனது பிளாக்கரை மாற்றினேன். அவ்வளவுதான் எனது பளாக்கர் கெட்டு குட்டிச்சுவரானது.

எழுத்துகளெல்லாம் ஏதோ நண்டுக்கால்கள் போல தெரிய ஆரம்பித்தன. மறுமொழி இட்டவர்களின் பெயர்கள் எல்லாம் ஏதோ போலத் தெரிந்தன. நானும் என்னால் முடிந்த பரிசோதனைகளை செய்து இருந்ததையும் கெடுத்ததுதான் மிச்சம். தமிழ் மணத்தின் கருவிப்பட்டை முதலானவையும் செயல் இழந்தது. தேன் கூடு மட்டும் வேலை செய்தது. கடைசியாக புதிய வலைப்பதிவை ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது.

இதன் போது பிளாக்கர் உதவிக் குழுவிற்கு நான் உதவி கேட்டு அனுப்பிய கடிதமும் அவர்கள் அனுப்பிய பதிலும் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள். யாருக்காவது உதவி செய்ய விருப்பமென்றால் அவர்களிடம் சொல்லுங்கள் பிளாக்கர் பீட்டாவிற்கு மாற வேண்டாம் என்று. கையைச் சுட்டவர்கள் பட்டியல் மோசமாக நீள்கின்றது. இனியும் தமிழ் வலைப்பதிவர்கள் தமது வலைப்பதிவை இழக்காமல் இருக்க இந்தத் தகவலைப் பரப்புவோம்.

அன்புடன்,
மயூரேசன்

Hi there,

Thanks for writing in. I'm afraid that once you migrate your account to
Blogger in beta, you can't switch back to your old Blogger account. We
apologize for any inconvenience and we hope you enjoy our new features.
Additionally, please rest assured that we are working hard to polish
Blogger in beta and fix every bug that arises as soon as possible.

Thank you for your continued patience with these issues.

Sincerely,
Danish
The Blogger Team



Original Message Follows:
------------------------
From: Jeyakumaran Mayooresan
Subject: requst to roll back from beta
Date: Sat, 2 Sep 2006 05:52:24 -0700 (PDT)

Hi there,
I have moved to blogger beta. But it's not supporting Tamil scripts as
the previous versions. It makes me loose my viewers. Please help me to roll
back from blogger beta. I can't work with beta anymore. Please help me.
http://blogmayu.blogspot.com
Thanking you
J.Mayooresan
Management and Information Tech.
Faculty of Science
University of Kelaniya
Sri lanka.

இந்தவார வலைத்தளம்

எனது வலைப்பதிவில் ஒவ்வொரு வாரமும் ஒரு வெப்தளத்தை அறிமுகப்படுத்துவதாக உத்தேசம். அதன்படி இந்தவார வெப்தளத்தை பற்றிய தகவல்கள் இதோ!

நம் அன்றாட இணை அனுபவத்தில் ஒவ்வோரு இணையத் தளமும் தமக்கென ஒரு படிவத்தை நிரப்பி அங்கத்தவரானாலே இங்கு இருக்கும் சேவையைப் பெறலாம் என அலுப்படிப்பது இன்று சகஜமாகி விட்டது.

இலவச சேவைகளைக் கூட அங்கத்தவருக்குத்தான் தருவோம் எனக்கூறி ஒரு பெரிய படிவத்தையும் நிரப்பத்தருவார்கள். அதில் அம்மா பெயர், அப்பா பெயர், நீங்க நெட்டையா குட்டையா, கறுப்பா சிவப்பா என எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்பர். இதில் இருந்து விடுதலை பெற ஒரு தளத்தை அமைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் http://www.bugmenot.com என்ற முகவரிக்கு சென்று அங்குள்ள பெட்டியில் உங்களுக்கு தேவையான இணைய முகவரியின் பெயரை இட்டு தேட வேண்டியதுதான். உங்களுக்கு தேவையான இணைய பக்கத்திற்கான பல பயனர் பெயர் இரகசியக் குறி கிடைக்கும்.

ஒவ்வொரு பயனர் பெயருடனும் அதன் நம்பிக்கை வீதத்தையும் காட்டியிருக்கின்றமை சிறப்பு அம்சமாகும். நீங்கள் கூட இங்கு விருப்பமானால் ஒரு தளத்திற்கான பயனர் பெயர் இரகசியச் சொல்லை உள்ளிடலாம். என்ன அதுக்கெல்லாம் ஒரு சேவை மனப்பாங்கு வேண்டும்.

11 September 2006

நண்பன் தனேஷின் கவிதைகள்

"செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்
முள் குத்துகிறது,
நீ இல்லாமல் நடக்கும் போதுதான்
வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"

"மரணப்பொழுதில்,
என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்
கடைசிப் பரிசு
உன் முகமாக இருக்கட்டுமே!"

"நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ
நீ : என்ன?
நான் : அதான் ........ காரியம்"

உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!

நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!


எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது....

AVG இலவச வைரஸ் ஸ்கானர்

Photobucket - Video and Image Hosting
AVG நிறுவனம் தமது வைரஸ் வருடியின் இலவசப் பதிப்பை வெளியிடுகின்றமை இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பல நிறுவனங்கள் தமது வைரஸ்கானரை கொள்ளை விலைக்கு விற்கும் போது ஏ.வி.ஜி இவ்வாறு செய்கின்றமை வரவேற்க வேண்டியதே.

இந்த இலவசப் பதிப்பை நீங்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாது. வீட்டுப் பாவனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயினும் தரமுயர்த்தங்கள் (Updating) தொடர்ந்தும் இலவசம். இதன் காரணமாக புது வைரஸ்கள் உங்கள் கணனியைத் தாக்காமல் பாதுகாக்கலாம். உங்களுக்கு தேவை ஒரு இணைய இணைப்பே.

இணைப்பு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை செயலியை நெட் கபேயில் பதிவிறக்கி வீட்டில் இன்ஸ்டால் செய்யுங்கள். அதே போல தரமுயர்த்திகளையும் பதிவிறக்கி வீடு கொண்டு சென்று உங்கள் செயலியை தரம் உயர்த்துங்கள். என்ன இரட்டை வேலை அவ்வளவுதான்.

உங்களுக்கு தொழில்நுட்ப உதவி போன்றவை தேவையென்றால் நீங்கள் எ.வி.ஜி பிளஸ்சை பதிவிறக்க வேண்டும். ஆயினும் இது பணம் கொடுத்து வாங்க வேண்டிய செயலி. 40 நாட்கள் பரீட்சாத்தமாகப் பாவிக்கலாம். அதன் பின்பு பணம் செலுத்தியே ஆக வேண்டும்.

இனியும் என்ன யோசனை பதிவிறக்க வேண்டியது தானே???

இலவச பதிப்பை பதிவிறக்க

9 September 2006

நினைவுகள் III

அப்போது வயது சுமார் நான்கு இருக்கும். அன்றய தினம் எனக்கு சரியாக ஞாபகம் இருந்தால் அக்டோபர் 15, 1988. அதாங்க எனக்குப் பிறந்தநாள். ஐந்தாவது வயது தொடங்குகின்ற நாள். காலையில் வழமை போல அம்மா, அப்பாவின் வாழ்த்துக்கள் மற்றும் உறவினரின் வாழ்த்துக்களும் வந்து சேர்ந்து கொண்டது. அத்துடன் அன்று பாலர் பாடசாலைக்கும் கொஞ்சம் சாக்லேட் வாங்கித்தருவதாக அப்பாவேறு கூறி இருந்தார். எனக்கோ ஒரே குஷி.........

வாழ்க்கையில் முதல் தடவையாக வீட்டிற்கு வெளியே என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றேன். அதனால் கொஞ்சம் பரபரப்பாகவெ இருந்தேன். நான் படித்த பாலர் பாடசாலை ஆசிரியையின் பெயர் பாலா ரீச்சர். இங்கு வழக்கம் என்ன வென்றால் காலையில் சென்றவுடன் அன்றய தினம் பிறந்ததினம் உள்ள மாணவர்கள் சாக்லட் பாக்கை அவரிடம் ஒப்படைப்பர். காலையில் இறைவணக்கம் முடிந்ததும் அவரின் தலமையில் அந்த மாணவனின் சாக்லெட் வினையோகம் நடக்கும்.

அப்பா காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் எனக்கு ஒரு பை சாக்லெட் வாங்கி வைத்து இருந்தார். அதை எடுத்து எனது நர்சரி பாக்கினுள் வைத்துக்கொண்டேன். காலை 7 மணி ஆகிவிட்டு இருந்தது. வழமைபோல அம்மா என்னை அவசரம் அவசரமாக நெர்சரியில கொண்டு சென்று விட்டா. நர்சரி வாசலுக்கு வந்ததும் எனது மனதில் ஒரு விபரீத ஆசை முளைக்க தொடங்கியது.

இவ்வளவு சாக்லெட்டையும் நானே சாப்பிட்டால் எப்பிடி இருக்கும். எதுக்கு இந்த பொடிங்களுக்கும் பெட்டைகளுக்கும் ஏன் என்ற அப்பா வேண்டித்தந்த சாக்லெட்ட குடுக்கோணும். என்ன சரியான கேள்விதானே???

நான் முடிவெடுத்து விட்டேன், அதாவது யாருக்கும் சாக்லெட் குடுப்பதில்லை எல்லாத்தையும் நானே சுடுவதென்று. வகுப்பில் நான் வழமைபோல சென்று உட்கார்ந்து கொண்டேன். அன்றய தினம் எனது வேறு ஒரு வகுப்புத் தோழனுக்கும் பிறந்த நாள். ஆகவே அவனின் ஒரு சாக்லெட்டையும் சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தது.

எல்லாம் முடிந்து வீடு வந்து விட்டேன். எனது நர்சரி பையில் இருந்து ஒவ்வொன்றாக சாக்லெட்டுகளை சாப்பிடத் தொடங்கினேன். நான் தொடர்ந்து சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதை அம்மா கவனித்து விட்டார்.

“தம்பி! என்ன இது சொக்லெட் எல்லாம் சாப்பிடுறாய்?”

“அது அம்மா... வந்து நர்சரியில குடுத்தது போக மிச்சம் அது” மழலை மொழியில் பொய் சொன்னேன்.

அம்மாவும் நம்பிவிட்டா. பின்பு அன்று இரவு எல்லாரும் இரவுச் சாப்பாடு சாப்பிடும் போதும் நான் கையில் சாக்லெட்டுகளுடன் இருக்கின்றேன். இப்போது அம்மாவிற்கு சந்தேகம் வந்து விட்டது.

“மயூரேசன்! பொய் சொல்ல வேண்டாம். இண்டைக்கு சொக்லேட் ஒண்டையும் வகுப்பில குடுக்கேலத் தானே?” உறுக்கலாக அம்மா கேட்டார்.

இதை கொஞ்சமும் எதர்பார்க்காத நான் பயத்திலே அழத் தொடங்கிவிட்டேன். பிரைச்சனையை பெரிதாக்க விரும்பாத அம்மா அந்த பிரைச்சனையை அத்துடன் முடித்துக்கொண்டார். அத்தனை சாக்லெட்டும் எனக்கே சொந்தமானது.

மறு நாள் இன்னுமொரு சாக்லெட் பாக் வேண்டப்பட்டது. இந்தத் தடவை என்னிடம் பாக் தரப்பட வில்லை. அம்மாவே அதை நர்சரி ஆசிரியையிடம் கொடுத்தார். ஆகவே அம்மா புண்ணியத்தில் எனக்கு நர்சரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தேறியது. இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும் விடையம் இது.

இதைப்போல நான் சங்கீதம் படித்தது கூட ஒரு சுவையான கதை. நான் சங்கீதம் படித்த ஆசிரியையின் பெயர் நற்குணம். நாங்களெல்லாம் செல்லமாக நரிக்குணம் என்று கூப்பிடுவம். இவரது அடித்தொல்லையில் இருந்து தப்பாத மாணவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்.

சுமார் 4 வயதிலேயே எனது சித்தியின் ஆசையின் பேரில் என்னை சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டனர். இந்த சித்தி என்னை இருக்கேலாமல் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டு தன் பாட்டிற்கு யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார். இப்போ எனக்கு சங்கீதம் சொல்லித்தர வீட்டில் யாரும் இல்லை. மிகவும் கஷ்டமான காலம் அப்போதுதான் தொடங்கியது.

சங்கீத வகுப்பிலோ அடி வேண்டாத நாள் இல்லை. வீட்டில் அம்மாவிடம் அடி விழுந்தது என்று சொல்லவும் விருப்பமில்லை. அதாவது மானப் பிரைச்சனை. என்னோட அம்மா நான் அடி வேண்டின கதையை எல்லாருக்கும் ஏதோ நான் சாதனை செய்தது போல சொல்லுவா. எனக்கு அந்த நடத்தை கொஞ்சம் கூடப் பிடிக்கிறதில்லை. அதனால சங்கீத வகுப்பில் நடக்கிறத எல்லாம் அம்மாட்ட சொல்லுறதே கிடையாது.

பிஞ்சு மனது துடியாய் துடித்தது கடுமையான மன அழுத்தம்!!!!!!!.

அப்போது தான் நான் ஒரு முடிவெடுத்தேன் அதாவது ஒவ்வொரு நாளும் வீட்டிலிருந்து வகுப்பு செல்வது போல புறப்படுவது. பின்பு திருமலை நகரை வலம்வருவது. வகுப்பு முடியும் நேரத்திற்கு மீண்டு வீடு செல்வது.

மாலை மூன்று மணி அளவில் வீட்டில் இருந்து புறப்படுவது பின்னர் 5 மணி அளவல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற தோறணையில் வீடு வருவது. இப்படியே காலம் போனது. எப்பிடியும் ஒரு ஆறு மாசம் என்னுடைய திருவிளையாடல் தொடர்ந்தது. என் கஷ்டகாலம் ஒரு நாள் வீதியில் என்னுடைய சங்கீத டீச்சரும் அம்மாவும் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்து விட்டனர். அம்மா கல்வி கற்பிக்கும் பாடசாலைக்கு அருகாமையில்தான் நான் சங்கீதம் கற்ற தட்சின காண சபா இருந்தது.

“என்ன உங்கட மகன் இப்ப சங்கீத கிளாசுக்கு வர்ரதில்ல ???”

“இல்லையே அவன் வாறவன். நேற்றுக் கூட வீட்டில இருந்து வெளிக்கிட்டவன் தானே !!” அம்மாவுக்கு தலைகால் புரியவில்லை பாவம்

“டீச்சர் உங்கட மகன் ஏதோ விளையாட்டு விடுறான். அவனை நாங்க கையும் மெய்யுமா பிடிப்பம்”.

“என்னால நம்ப ஏலாம இருக்குது இந்தப் பொடியன் இப்பிடி செய்யிறான் எண்டு!!” அம்மாவிற்கு எதுவுமே புரியவில்லை. மகன் இப்பிடி ஒரு பயங்கரவாதியாய் இருப்பான் என்று அவர் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை அதுவும் இத்தனை சிறிய வயதில். பாவம் அவன் அந்த ரீச்சரிடம் அடிபட்டது இந்த அம்மாவுக்குத் தெரியாது தானே.

மறு நாள் வழமை போல வீட்டிலிருந்து புறப்பட்டேன். சோனகவாடி பள்ளிவாசல் அருகாமையில் இரண்டு பொடியங்கள் கையைக்காட்டி என்னை மறித்தாங்கள். நானும் வலு கலாதியா சைக்கிளை ஓரம் கட்டிக்கொண்டு. “என்ன அண்ணா?” என்று கேட்டேன்.

கிட்ட வந்து சடார் என என்னை மடக்கிக் கொண்டான். அப்பிடியே அலேக்கா என்ன சபாக்கு கொண்டு போயிட்டான் அங்க அம்மா சங்கீத ரீச்சர் எல்லாரும் எனக்கு தட்சிணை போடக் காத்திருந்தாங்கள்.

“ரீச்சர்! இவனுக்கு அடிக்கிறதப் பற்றி கவலப்படாதீங்கோ. நல்லா அடிபோடுங்கோ அம்மா வேறு உத்தரவாதம் கொடுத்துவிட்டுப் போனார்.

அன்றிலிருந்து இரண்டு மாதத்தினுள் சங்கீதம் முதலாம் தரப்பரீட்சை வர இருந்தது. ஆகவே எனக்கு இரவு பகலாக கடும் சங்கீத வகுப்பு நடைபெற்றது. கடைசியாக சங்கீதப் பரீட்சையும் முடிந்தது. ஆயினும் அது வரைகாலமும் நான் பெற்ற அடிகள் கணக்கில் அடங்கா. இறுதியில் இதற்கு மேல் என்னால் படிக்க முடியாது என்பதை அம்மாவிற்குப் புரியவைத்து நான் சங்கீத வகுப்பில் இருந்து நின்று விட்டேன். ஆனால் இன்று தொடர்ந்து படித்து இருக்கலாம் என்ற ஒரு நெருடல் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.

நினைவுகள் II

எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். பாரதி கூறியது போல நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....

ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. “சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா” என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.

ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...

முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.

“என்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?” பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.

ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது.

இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். “உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்”. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் “தம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?” என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன்.

“மயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...”

“ரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்”

“இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத”

எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது (செல்வன் அண்ணா கொசுவர்த்தி கொழுத்த இல்லாவிட்டால் சுட்டு வீழ்த்த சொல்லமாட்டீங்க என்று நம்புகின்றேன்). இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.

ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!

நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.

“டேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?”

“இல்ல அவர்தான் எழுதினவர்!”

“நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.

அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........

ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (மிசன் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....

நினைவுகள்

ஒரு வயது ம்ஹும்....
இரண்டாவது வயது ம்ஹும்.... ஞாகபகம் இல்லை
மூண்றாவது வயது சத்தியமா எதுவும் குறிப்பிடும் படியாக ஞாபகம் இல்லை...
நான்காவது வயதில்.... ஆம் சில சில ஞாபகங்கள் வருகின்றது...... ஆனால் சிதறல் சிதறலாக அங்கு மிங்குமாக.......

நர்சரிக்கு அம்மா காலையில் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போவது ஞாபகம் இருக்கின்றது..

நர்சரி ரீச்சரின் பெயர் பால.... என்று தொடங்குகின்றது சரியாக ஞாபகம் இல்லை. எல்லாரும் வீடு சென்றபின்னரும் நான் அம்மாவின் வருகைக்காக காத்து இருப்பேன்....... அம்மா அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் என்பதால் அம்மா வர எப்பிடியும் 1.30 ஆகும். அதுவரைக்கும் நர்சரி ரீச்சரின் பேத்தியுடன் விளையாடியதாக ஞாபகம். பேத்தியின் பெயர் ஜனனி என்று நினைக்கின்றேன். சில வருடங்களிற்குப் முன்னர் இவர்களைப் பற்றி அம்மா ஒரு நாள் சொன்னா நர்சரி ரீச்சரும் அவரின் முழு குடும்பமும் கனடாவில் செட்டிலாகிட்டதாய். இதுக்கு மேல் ஜனனி பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது... அவ முகம் கூடி எனக்கு இப்ப ஞாபகம் இல்லை...

இதுக்குப் பிறகு பாடசாலைக்கு போனது நல்லா ஞாபகம் இருக்கு அப்போது நான் சேர்ந்த பாடசாலை கோனேஸ்வரா வித்தியாலயம். பாடசாலைக்குள் நுழைந்தபேது கஜேந்திரன் எனும் பொடியன் ஜன்னலில தொங்கிக் கொண்டிருந்ததும் நல்ல ஞாபகம் இருக்குது. இப்ப இவன் யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றான். இவங்கள விட சங்கர்கணேஷ், தேவ்காந், ஜெகன்.... இவங்களெல்லாம் இப்ப எங்கையோ தெரியாது.

பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கலாம் அதுக்குப் பின்னர் சுவருக்கு மறுபக்கமுள்ள இந்துக் கல்லூரிக்குப் போக வேண்டும். ஆனால் நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது இரண்டு பாடசாலைகளையும் ஒரு பாடசாலையாக்கி மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
http://www.tcohindu.org

முதலாம் வகுப்பில் பாலேஸ் ரீச்சர். இப்ப கண்டாலும் சைக்கிளால இறங்கி குட்மோர்ணிங் சொல்லுவன். இப்ப ஓய்வு பெற்று விட்டா. ஆங்கிலம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களையும் இவரே படிப்பிப்பார். நாம் படிக்கும் போது நான்காம் ஆண்டு வரை எமது இலங்கை பாடவிதானத்தில் ஆங்கிலம் இருக்கவில்லை. நான்காம் ஆண்டுக்கு போக பயப்பிட்ட காரணங்களில் ஒன்று ஆங்கிலம் தொடங்குகின்றது, இரண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, மூண்று என் பிரியமான பாலேஸ் ரீச்சர் போய் புது ரீச்சர், பெயர் ஜெயகலா வருகின்றார். எதிர் பார்த்ததைவிட எம்முடன் அன்பாகவே இருந்தார்.
எட்டு வயதில் என்றுதான் நினைக்கின்றேன் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுவிஸ்லாந்து சென்ற ஞாபகம் இருக்கின்றது. அவரை வழி அனுப்ப கொழும்பு வந்த போது புறக்கோட்டை அரசமரத்தடியில் துலைந்து போய் அழுது கொண்டு நின்றதும் பின்பு கடலை விற்கும் ஒரு சிங்களவன் என்னை போக்குவரத்து கண்காணிப்பு பொலீசிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டதும் நன்றாகவே ஞாபகம் இருக்கின்றது. இப்போது கூட அவ்விடத்தால் செல்லும்போது ஒரு தடவை மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். அந்த கடலை வியாபாரியை மட்டும் ஞாபகம் இல்லை........

நான்காம் வகுப்பில்தான் என் வாழ்கையில் பயங்கரமான விபத்து நடந்தது. அது வரை சுகந்திரப் பறவையாக பறந்து திரிந்த என்னை ரியூசன் எனும் கூட்டுக்குள் அடைத்து விட்டப்பட்ட நாள். அதுவும் நகரிலேயே கடுமைக்குப் பெயர் போன தனம் அக்கா எனும் ரீச்சரிடம். இவரிடம் நான் வேண்டாத பேச்சு என்ன வேண்டாத அடி என்ன. பல தடவை அம்மா நான் செய்த குற்றங்களிற்காக ரியூசன் வகுப்பு ரீச்சரை சந்தித்து இருக்கின்றா. உதாரணமா ஒரு நாள் நாங்களெல்லாம் ரியூசனுக்கு முன்னால் உள்ள மைதானத்தில் கிரிகட் விளையாடினோம் எங்கள் அனைவரையும் 10 ம் வகுப்பு மாணவர்களை ஏவி விட்டு கைது செய்து முட்டிபோட்டு வெய்யிலில் நிக்க வைத்தா அந்த ஆத்தா. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவரால் தான் நான் புலமைப்பரிசில் பரீட்சை முதல் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சை வரை சித்தி எய்தினேன்.

இந்தக் காலமெல்லாம திரும்பி வராது இப்போது இயந்திரத்தனமான வாழ்கை. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு பின் பஸ் தரிப்பிடத்திற்கு ஓடி அங்கிருந்து 138 ம் இலக்க பஸ் எடுத்து கம்பஸ்சுக்குபோய்...... இப்படியே அலுப்பான வாழ்க்கை..... செய்ததையே திருப்பி திருப்பி செய்யும் வாழ்க்கை.

பேசுவதற்கோ அரவணைப்பதற்கோ அம்மாவும் அருகில் இல்லை. சண்டைபோட தங்கையும் அருகில் இல்லை.... போதுமடா சாமி இந்த பாழ்பட்ட நரக கொழும்பு வாழ்க்கை......

இரண்டாம் பாகம் விரைவில்.......

8 September 2006

PDF செய்யனுமா???

கீழே உள்ள சுட்டியை சுட்டி பி.டி.எஃப் எழுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள் இது இலவசமானது அத்துடன் திறந்த மூல மென்பொருள்.

பதிவிறக்க

இதை இன்ஸ்டால் செய்தால் ஒரு பிரிண்டர் ரைவரை அது இன்ஸடால் பண்ணும் பின்பு நீங்கள செய்ய வேண்டியதெல்லாம ரெம்ப இலகு....

நீங்கள் பிடிஎப் செய்ய தெவையான கோப்பை திறந்து கொள்ளுங்கள்.


பின்பு ஃபைல் மெனுவல் பிரிண்ட் என்பதை தெரிவு செய்யுங்கள்


பிரிண்டராக PDF creator என்பதை தெரிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள்


இப்போது வரும் விண்டோவில் சேவ் என்பதை தேர்வு செய்து தேவையான இடத்தில் சேமியுங்கள்


அப்புறம் என்ன பிடிஎஃப் ஃபைல் ரெடி!!!!!!!1

டெம்பிளேட் உதவி - தமிழ் மணம் கருவிப் பட்டை போட

நான் எனது வலைப்பதிவிற்கு மூன்றாம் தரப்பு டெம்பிளேட் ஒன்றைப்பாவிக்கின்றேன். எனக்கு இதில் தமிழ் மண கருவிப் பலகயை உள்ளிட முடியாமல் உள்ளது.

யாராவது உதவி செய்வீர்களா???

எனக்கு ஒரு உதவி தேவையென்றால் வேற யாரிடம் உதவி கேட்பேன்

டெம்பிளேட் காப்பி ஒன்றைப்பெற

தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள். இந்த டெம்பிளேட்டை போதுமான வரை தமிழாக்கம் செய்துள்ளேன். ஆகவே வேறு யாரும் தேவையென்றாலும் பயன்படுத்தலாம்.

அன்புடன்
மயூரேசன்

7 September 2006

.net பிறந்த கதை


ஆரம்பக் காலகட்டத்தில் நிரலாளர்களிற்கு இயங்கு தளங்கள் பல இருக்காததால் பிரைச்சனை இருக்க வில்லை. தன் பாட்டிற்கு தமக்கு தேவையான இயங்கு தளத்திற்கு நிரல்களை எழுதினார்கள். இணையத்தின் பரவலால் அனைத்து தளங்களிலும் இயங்க கூடிய நிரல்கள் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக வின்டோஸ், லினக்ஸ், சொலாரிஸ், மக் ஓ ஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து நிரலாளர்கள் (Programmers) இரண்டு அணியில் பிரிந்து கொண்டனர்.

1. வின்டோஸ் சார் நிரலாளர்கள்
2. ஏனைய இயங்கு தளம் சார் நிரலாளர்கள்


தொன்னூறுகளில் சன் மைக்ரோ சிஸ்டம் இந்தப் பிரைச்சனையை வெற்றிகரமாக அணுகியது. இதன்போது யாவா எனும் மொழி அறிமுகப் படுத்தப்பட்டது. ஜாவாவின் சிறப்பே அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடிய தன்மையாகும்.

யாவாவின் அதீத வளர்ச்சி வழமை போல மைக்ரோசாஃப்ட்டை கலங்கடித்தது. மென்பொருள் உலகின் முடிசூடா மன்னன் யாவாவை விழ்த்த தன் வழமையான தந்திரத்தைக் கையாண்டது. அதுதாங்க எதிரியின் பலத்தையே தன்பலமாக மாற்றுதல். அப்பட்டமாகச் சொன்னால் காப்பி அடித்தல்.

1998 ல் மைக்ரோசாப்ட் Programming Architecture ஐ இரகசியமாகத் தயாரிக்கத் தொடங்கியது. பிற்காலத்தில் இது NGWS (Next Generation Windows Service) எனப் பெயரிடப் பட்டது. முயற்சிகள் யாவும் இரகசியமாகவே நடைபெற்றன. தற்போது இந்த NGWS ஐ .net எனப் பெயரிட்டுள்ளனர். 2000 ஜுலை யில் மைக்ரோசாப்ட் .நெட் பற்றி உத்தியோக பூர்வமாக அறிவித்தது.

.நெட்டில் யாவாவைப் (யாவாவில் இன்டபிரிடர் முறை பயன் படுகின்றது) போலல்லாமல் கம்பைலர் பயன் படுகின்றது இதனால் .நெட் செயலிகள் யாவா செயலிகளைவிட வினைத்திறனாக செயற்படக் கூடியன. இதைவிட யாவாவைப் போல சிறப்பாக நினைவக முகாமைத்துவத்தைச் (Memory Management) செய்கின்றன.

யாவாவின் (JVM) Java Virtual Machine போல .net செயலிகள் இயங்க .நெட் ஃபிரேம்வேர்க் தேவைப்படும். இது மைக்ரோசாப்டின் தளத்தில் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.

.net ஃபிரேம்வேர்க் இயங்கு தளத்திற்கும் செயலிக்கும் இடையில் ஒரு ஊடகமாக தொழிற்படுகின்றது. அதாவது நினையுங்கள் உங்களுக்கு தமிழ் தெரியும் ஆனால் சிங்களம் தெரியாது. உங்கள் சிங்கள நண்பனுடன் பேச என்ன செய்வீர்கள். ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவை. அந்த மொழி பெயர்ப்பாளர் நீங்கள் பேசும் தமிழை சிங்களத்திற்கும் நண்பன் பேசும் சிங்களத்தை தமிழுக்கும் மொழிபெயர்ப்பான். .net ஃபிரேம்வேர்க்கும் இதையே செய்கின்றது.

இங்கு முக்கியமான பிரைச்சனை ஒன்று இருக்கின்றது. சோர்ஸ் கோடை மீள பெறுவது இலகுவானது ஆகும். அதாவது நிரலாளரால் வழங்கப்படும் இடைநிலை பயிலை மீள சோர்ஸ் கோடாக மாற்றிக் கொள்ளலாம் (Reverse Engineering) இதனால் பதிப்புரிமைப் பிரைச்சனை ஏற்படுகின்றது.

.net Framework பதிப்புகள்
• பீட்டா பதிப்பு நவம்பர் 2000
• 1.0 ஜனவரி 2002
• 1.1 ஏப்ரல் 2003
• 2.0 2005

விசுவல் ஸ்டூடியோ .net பதிப்புகள்
• பீட்டா பதிப்பு நவம்பர் 2000
• VS.NET 2002 பெப்ரவாரி 2002
• VS.NET 2003 ஏப்ரல் 2003
• VS.NET 2005

6 September 2006

தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க

தற்போது கணணியில் ஆங்கிலத்தில் செய்யும் வேலைகள் அனைத்தையும் கிட்டத்தட்ட தமிழிலும் செய்ய முடியும். இதற்கு முதலில் உங்கள் கணணியில் யுனிகோட் வசதியை உயிர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பல.
1. உங்கள் மொசிலா உலாவியில் தமிழ் ஒழுங்காகக் காட்சி தரும்
2. கோப்புகளிற்கு தமிழில் பெயரிடலாம் (குறிப்பாக தமிழ் பாடல்களிற்கு) .
3. இன்டாநெட் எக்ஸ்புளோரர் டைட்டல் பாரில் தமிழ் தலைப்புகள் தெரியும் (இல்லாவிட்டால் சில பெட்டிகளே தெரியும்)

இதைப்போல பல எண்ணிலடங்கா வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.முதலில் Start -> Control Panel -> Regional and Language Option என்ற தெரிவை இரட்டைக் கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் Languages எனும் டப்பை கிளிக் செய்யவும் பின்பு Install files for complex script and right-to-left languages எனும் செக் பாக்சை செக் செய்யவும். இப்போது ஓகே பட்டனை கிளிக் செய்யவும் உங்களிடம் வின்டோஸ் எக்ஸ் பி குறு வட்டு கேட்கப்படும்

அதையுள்ளிட்டால் தானாக நிறுவல் முடிவடையும். அதன் பின்னர் ஒரு தடவை கணணியை மூடிப் பின்னர் திறவுங்கள் (ரீபூட் செய்யுங்கள்).
இப்போது உங்கள் கணணி யுனிக்கோட்டின் உச்சப் பயன்பாட்டைப் பெறத்தயாராகி விட்டது. உங்கள் கணணியை ஒரு தடவை பரீட்சித்துப் பார்ப்பதற்கு நீங்கள் பின்வரும் வெப்தளங்களுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.

1. http://www.bbctamil.com
2. http://ta.wikipedia.org
3. http://www.bbc.co.uk/hindi (இது இந்தி வெப்தளம்)

இனி அடுத்த பதிவில் எவ்வாறு யுனிகோட் தமிழில் உள்ளிடுவது (Input) எனப் பார்ப்போம். இந்த முறை மூலம் நீங்களும் உங்கள் வலைப் பதிவுகளில் தமிழில் உள்ளிடலாம்.

5 September 2006

இனைய அரட்டைக்கு மேபோ

பல ஆபீஸ் மற்றும் நிறுவனங்களில் இணைய அரட்டையை தடை செய்துள்ளபோது இந்த தளத்தைப் பயன் படுத்தி நீங்கள் அரட்டை அடிக்கலாம்.

இதில் யாகூ, எம்.எஸ்.என், ஜீடாக், மற்றும் ஏ.ஓ.எல் போன்ற அரட்டை வழங்கிகளைப் பயன் படுத்தலாம். நீங்கள் உங்களுக் கென ஒரு கணக்கை உரு வாக்கி கொண்டீர்களானால் பின்பு நீங்கள் ஒரே தடவையில் மேற்கூறிய யாகூ, ஜீ டாக் என அனைத்திலும் சைன் இன் செய்யலாம். ஒரு வின்டோவில் எல்லா நண்பர்களையும் காட்டும். அட்டகாசமாக உள்ளது பயன்படுத்தித்தான் பாருங்களேன்.

இங்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவரும் இதைப் பயன்படுத்தலாம். தமிழ் இடைமுகத்தை ஆரம்பிக்க தொடக்கப்பக்கத்தில் தமிழ் என்பதை சுட்டுங்கள். அப்புறம் என்ன அழகான தமிழ் இடைமுகம் கிடைக்கும்.

இதைவிட விடஜெட் என்றொரு வசதியும் உள்ளது அதன் மூலம் உங்கள் தளத்திற்கு வரும் நபர்களோடு நீங்கள் உரையாடலாம். எனது சைட் பாரில் ஒரு மேபோ விட்ஜெட் உள்ளதைப் பார்க்காலாம்.
http://www.meebo.com

சால் வீ டான்ஸ் (2004) - திரைவிமர்சனம்

பரபரப்பான சிக்காகோ நகரத்தைக் காட்டுவதுடன் இந்தத்திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இங்கு கதையின் முக்கிய பாத்திரமான யோன் கிளாக் ஒரு கணக்கியலாளர். அளவுக்கதிகமாக வேலை செய்து வேலை செய்து கிட்டத்தட்ட விரக்தி அடைந்து விட்ட ஒரு கணக்கியலாளர்.
ஒவ்வொரு நாளும் இவர் வேலை முடிந்து மின்சார இரயிலிலே வீடு திரும்பும் வழியில் ஒரு நடனப் பள்ளியைக் காண்கிறார். அதன் ஜன்னல் ஓரத்தில் நிற்கும் ஒர அழகுப் பதுமையையும் (ஜெனிபர் லோபெஸ்) காண்கிறார்.
இந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிளார்க் அந்த நடனப் பள்ளியில் போல் ரூம் நடனம் கற்றுக்கொள்ளச் சேர்கின்றார். அந்த பள்ளியில் பிரதான ஆசிரியையான மிற்சி என்பவரின் கீழ் நடனம் பயில ஆரம்பிக்கும் இவர் தன் கண்களைக் கவர்ந்த அந்த அழகுப் பெண்ணின் பெயர் போலீனா எனவும் அவர் அந்த நடனப் பள்ளியில் உதவி ஆசிரியர் எனவும் அறிந்து கொள்கிறார்.
வெறுமனே சேர்ந்த நடனத்தில் கிளார்க் காலப்போக்கில் ஒன்றி விடுகின்றார். இதற்கிடையில் இவரின் அலுவலக நண்பர் ஒருவரும் அங்கே நடத்துறையில் இருப்பதை அறிந்து கொள்கின்றார். ஆயினும் அந்த நண்பர் தன்னை வெளி உலகிற்கு ஒரு விளையாட்டு இரசிகனாக மட்டுமே காட்ட விழைகின்றார். இவரும் கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாகின்றார்.
ஆரம்பத்தில் கிளார்க்கை நிராகரித் போலீனா பின்பு மெல்ல மெல்ல அவரை நெருங்கத் தொடங்குகின்றார்.
காலப் போக்கில் கிளார்க்கிற்கு சிக்காகோ கிரிஸ்டல் போல் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது. இதே வேளையில் கிளார்கின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் அவரின் மனைவி ஒரு தனியார் துப்பறிவு நிபுனர் மூலம் கணவரின் இரகசியமான நடன வகுப்புகள் பற்றி அறிந்து கொள்கின்றார்.
போட்டியிற்கு கிளார்க் அவரது ஆசிரியை மிட்சி மற்றும் போலீனாவால் பயிற்று விக்கப்படுகின்றனர். கடைசியாக ஒரு தடவை போலீனாவால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்போது உருவாக்கப்பட்ட நடனக்காட்சிகள் பார்ப்பவரை ஆட்கொள்ளுமாறு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடனப் பயிற்சியின் போது நடனம் பற்றி போலீனா சொல்லும் சில கருத்துக்களும் அழகானவை. உதாணத்திற்கு அவள் படம்ஆவாள் நீ அதைத் தாங்கும் சட்டமாவாய் நீ செய்வதை அவள் அப்படியே பிரதிபலிப்பாள். இது நடனத்தைப் பற்றி போலீனா கூறுவது.
இறுதியாக கிளார்க் இரகசியமாக வந்த சிக்காகோ போல்ஸ் டான்ஸ் போட்டியில் அவரின் மனைவியும் மகளும் அவரிற்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இவர் நடனமாடிக்கொண்டு இருக்கும் போதே தனது துணைவியாரையும் மகளையும் காண்கின்றார். இதன் பின்பு கணவன் மனைவிக்கிடையில் கடும் சண்டை வெடிக்கின்றது.
மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்தாரா கிளார்க் அல்லது போலீனாவுடன் சென்றாரா? நடனப் போட்டியில் கிளார்க் வெற்றி பெற்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள்.
இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். நடுத்தர வயதினரை கவரும் என்பது என் கணிப்பு. எது எவ்வாறாயினும் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த திருப்தி வேண்டு மென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். அதிரடி ஆக்ஷன் திரைப்பட இரசிகர்களிற்கான திரைப்படம் இது வல்ல என்பதையும் கருத்தில் கொள்க.

தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)

மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதர்கள் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.
தொடர்பாடல் முறைகளானது மனித வர்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.• மேளங்கள்• நெருப்பு• அங்க அசைவுகள்
பின்னய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது.
இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
பொதுவாக நாம் ஏன் தொடர்பாடல் செய்ய விரும்புகின்றோம் என யோசித்துப் பார்த்துண்டா?. பின்வருவனவற்றில் ஒன்றிற்காக அல்லது பலதிற்காக அல்லது அனைத்துக்குமாக.• எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள• திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள• மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த• பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த (இது பெண்களுக்கான சிறப்புத் தேவை!!!!)
பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.1. ஒலி – பேச்சு, ஒலிகளைப் பயன் படுத்தல்2. காட்சி – படங்கள், குறியீடுகள், நிறங்கள்
தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்1. அனுப்புனர்2. ஊடகம்3. பெறுனர்
உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளுங்களேன். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியை குளப்பும் தன்மைகொண்டவை உதாரணமாக சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலையால் குளம்புகின்றனவே அதைக் குறிப்பிடலாம்.
தொடர்பாடலானது ஒரு திறமை என்றும் சிலர் அது ஒரு கலை பிறவியிலேயே வரவேண்டும் என்றும் கூறுவர். இது சிறிது சிக்கலான கேள்வியே!. இரண்டும் இருந்தால் தான் ஒருவர் சிறந்த தொடர்பாடல் செய்ய இயலும். உதாரணமாக பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்ய கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும்.
எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.
மனிதனின் தொடர்பாடலுக்கான மற்றும் தனித்து இருக்க முடியாமல் இருக்கும் தன்மைக்கு அமேரிக்க ரஸ்ய பனிப்போர் நேரத்தில் நடந்த ஒரு கதையைக் கூறினால் இங்கே தகும்.
அதாவது ஒரு ருசிய ஒற்றன் சி.ஐ.ஏ யிடன் முறையாக மாட்டிக் கொண்டான். அப்போது அவனை பல வழிகளில் கடுமையாக விசாரித்தும் அவன் வாய் திறக்க வில்லை. அப்போது அவன் யாருடனும் பேசமுடியாத இருண்ட சிறைக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டபோது சரியாக இரண்டாவது நாளே தான் பேசத் தயார் எனக் கூறி தான் அமேரிக்கா வந்த நோக்கத்தினை சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறிவிட்டான்.
இந்த உதாரணத்தில் இருந்து என்ன தெரிகின்றது மனிதன் தனித்து வாழ முடியாத ஒரு ஜந்து. தொடர்பாடல் இல்லா விட்டால் மீண்டும் மனிதன் கற்காலத்திற்கு போய்விடுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால காலாகாலத்திற்கு அம்மாவிற்கோ மனைவியிற்கோ யாராவது நீங்க விரும்புபவர்களிற்கு கடிதம், மின்னஞ்சல் அட்லீஸ் ஒரு காலாவது போட மறக்காதீங்க!!!!

காதலி வேண்டாம் காதலி




இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.

  1. நேரம் மீதமாகும்
  2. நன்றாக நித்திரை கொள்ளலாம்
  3. மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை
  4. எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்
  5. நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது
  6. எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்
  7. அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க
  8. எங்கேயும் யாரோடையும் போகலாம்
  9. எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை
  10. பழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை

இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???

"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!

கையைச் சுட்ட பிளாக்கர் பீட்டா!

புதிய வலைப்பதிவு ஆரம்பிக்க காரணம் பிளாக்கர் பீட்டா செய்த குளறு படிகளே. என்னுடன் நன்கு உழைத்துக்கொண்டு இருந்த பிளாக்கரை ஒரு நாள் நான் தேவையில்லாமல் பீட்டா பிளாக்காராக மாற்றினேன். அன்றுதான் என் பிளாக்கரை சனி பிடித்துக்கொண்டது. இன்று கடும் தொழில் நுட்பச்சிக்கல்களால் அந்த வலைப்பதிவைக் கைவிட்டு புதிய வலைப்பதிவை ஆரம்பித்துள்ளேன். பழைய வலைப்பதிவில் இருக்கும் கட்டுரைகளை இங்கு மெல்ல மெல்ல மாற்றிய பின அந்த வலைப்பதிவை அழிக்கும நோக்கம் உள்ளது. ஆகவே மயூரெசனின் புதிய வலைப்பதிவு http://tamizhblog.blogspot.com

பிளாக்கரும் சரி தமிழ் மணமும் சரி எனக்கு உதவி செய்யத் தவறி விட்டன. கடிதம் மேல் கடிதம் அனுப்பியும் எந்தப்பயனும் இல்லை. ஆகவே என்னுடைய பழைய வலைப்பதிவு http://blogmayu.blogspot.com மரணித்து விட்டதாகக் கொள்ளவும்